← Back to list
PLKN 3.0 !
Dec 16, 2024

தேசிய சேவை பயிற்சி திட்டம் 3.0, மீண்டும் அடுத்தாண்டு ஜனவரி மாதம் தொடங்கவுள்ளதாகத் தற்காப்பு அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin தெரிவித்துள்ளார்.
புதிய வடிவிலான அப்பயிற்சி திட்டத்துக்கு, அரசாங்கம் 50 மில்லியன் நிதியை ஒதுக்கியுள்ளதாக அவர் கூறினார்.
இந்த முதல் பயிற்சி திட்டத்தில் 200 மாணவர்கள் பங்கெடுக்கவுள்ள நிலையில், 500 பயிற்சியாளர்கள் பணியமர்த்தப்படவுள்ளனர்.
200 மாணவர்களில் 148 ஆண்களும் 52 பெண்களும் அடங்குவர்.
அது அடுத்தாண்டு ஜனவரி 12-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 25-ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
---------
அடுத்த ஆண்டு மாரச் மாதம் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான வீட்டிலிருந்து கற்றல் கற்பித்தல் நடவடிக்கை தொடரும் என கல்வியமைச்சர் Fadhlina Sidek தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் அங்கிருந்தபடி கற்றல் கற்பித்தல் நடவடிக்கையை மேற்கொள்ள, கல்வியமைச்சு அந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.
---------
இதனிடையே, நாட்டில் தற்போது 116 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு, 2 வெவ்வேறு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-----------
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim, 2025-ஆம் ஆண்டு மலேசியாவின் ஆசியான் தலைவர் பதவிக்கான முறைசாரா ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக, தாய்லாந்து முன்னாள் பிரதமர் Thaksin Shinawatra-ராவை நியமித்துள்ளார்.
-----------
பிரபல இந்திய தமேலா இசைமேதை, Zakir Hussain, தனது 73-ஆவது வயதில் அமெரிக்காவில் காலமானார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather