← Back to list
காப்பீட்டு பிரிமியம் விவகாரம் !
Dec 13, 2024

அடுத்தாண்டு நமது காப்பீட்டு பிரீமியத்தில் பெரிய உயர்வு இருக்குமா என்பதை விரைவில் கண்டறிவோம்.
Bank Negara அவ்விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், அதன் முடிவு விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தொடர்புத்துறை அமைச்சர் Fahmi Fadzil தெரிவித்துள்ளார்.
முன்னதாக, மருத்துவ காப்பீட்டு பிரீமியங்கள் 70 விழுக்காடு வரை உயரக்கூடும் என செய்திகள் வெளிவந்ததை அடுத்து, அரசாங்கம் அதற்கு தீர்வு காணும் என பிரதமர் அறிவித்திருந்தார்.
----------
தீயணைப்பு வீரர்களுக்கான ஊக்கத்தொகையை, வீடமைப்பு ஊராட்சி துறை அமைச்சு மதிப்பாய்வு செய்து வருகிறது.
அப்பரிசீலனையில் தீயணைப்பு வீரர்களுக்கான, நேரத்திற்கான ஊக்கத் தொகையும் அடங்கும் என அதன் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தீயணைப்பு வீரர்களின் நலனை மேம்படுத்துவது குறித்து, தமதமைச்சு எப்போதும் கருத்தில் கொள்ளும் என்றும் அவர் கூறினார்.
---------
200-க்கும் மேற்பட்ட அரசு சாரா இயக்கங்கள், இந்திய சமூகத்தின் சமூக-பொருளாதார மேம்பாடு PPSMI 2025 மானியத்திற்கு விண்ணப்பித்துள்ளன !
டிசம்பர் 2-ஆம் தேதி திறக்கப்பட்டுள்ள அவ்விண்ணப்பம், அடுத்த மாதம் 5-அம் தேதி வரை திறந்திருக்கும்.
எனவே, இந்திய சமூகத்திற்காக உயர் தாக்கத் திட்டங்களை செயல்படுத்த ஆர்வமுள்ள நிறுவனங்கள், அந்த மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என Mitra தெரிவித்துள்ளது.
---------
பேராக் தெலுக் பாத்தேக்கில், முதலை இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பில் மாநில வனவிலங்கு, தேசிய பூங்காக்கள் துறை, தொடர்ந்து அதன் சுற்றுப்புறங்களைக் கண்காணித்து வருகிறது !
முதலையை பிடிப்பது தொடர்பில் இதுவரை எந்தப் பொறிகளும் அமைக்கப்படவில்லை என்றும், ஆனால் அப்பகுதிவாழ் மக்கள் ஜாக்கிரதையுடன் இருக்கும்படியும் அத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
---------
அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கும் வடகிழக்கு பருவமழைக் காலம், 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், அடுத்த வாரம் திங்கட்கிழமை தொடங்கி, 19-ஆம் தேதி வரை, பேராக், கிளாந்தான், தெரெங்கானு, பஹாங்கில் தொடர் மழை பெய்யலாம் என மெட் மலேசியா சொன்னது.
---------
ஊழலுக்கு எதிராக நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில், நாட்டில் பணமோசடி மற்றும் ஊழல் எதிர்ப்பு அகாடமியைத் தொடங்குவதாக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின், முன்னாள் தலைவர் ஒருவர் அறிவித்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather