← Back to list
மேத்தாவை Fahmi சாடல் !
Dec 06, 2024

தன்னுடைய சமூக ஊடக களமான முகநூல் வழி, மோசடியில் மலேசியர்கள் 432 மில்லியன் ரிங்கிட் இழந்திருப்பதற்கு, மேத்தா பொறுப்பேற்காதது, வருத்தப்படாதது குறித்து தொடர்புத் துறை அமைச்சர் Fahmi Fadzil கடுமையாக சாடியுள்ளார்.
இந்நிலையில் விரைவில் அமல்படுத்தப்பட இருக்கும் சமூக ஊடக தளங்களுக்கான உரிமைப் பெறும் விவகாரத்தில் மேட்டாவின் கவலையை அவர் புறந்தள்ளினார்.
மேட்டாவின் அந்த கவலை வெறும் கண் துடைப்புத் தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
-----------
சிலாங்கூரில் உள்ள மருத்துவ சாதனங்கள் வழங்கும் நிறுவனமொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், 20-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதிவு செய்யப்படாத மருத்துவ சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கருவுறுதல் பரிசோதனை கருவிகள், கர்ப்ப பரிசோதனை கருவிகள், ஆணுறைகள் ஆகிய சாதனங்களாகும் என மருத்துவ சாதன ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முரளிதரன் பரமசுவா தெரிவித்துள்ளார்.
----------
Johor Batu Pahat-டில், ஒரு மாணவி எஸ்பிஎம் தேர்வுக்கு அமர்வதற்கு ஒரு நாள் முன்பு, கோமா நிலையில் விழுந்து உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.
அம்மாணவி, அத்தேர்வில் அமர்வதற்கு ஒரு நாள் முன்பு தான், தனக்கு தலை வலிப்பதாக புகார் கொடுத்திருந்ததாக, மாநில சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் குழு தெரிவித்துள்ளது.
----------
நாடு முழுவதும் நேற்று மட்டும், 1,600-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 12 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
----------
உணவு மற்றும் பானங்கள் என கூறப்பட்ட பொட்டலங்களில், 30 கிலோகிராம் எடையிலான போதைப்பொருட்களை மறைத்து நாட்டிற்குள் கடத்த, இரு மலேசியர்கள் மேற்கொண்ட இரண்டு முயற்சிகளை தேசிய சுங்கத் துறை முறியடித்துள்ளது.
-----------
நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 14-ஆயிரமாகக் குறைந்துள்ளது.
-----------
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கில், Astro Radio Kami Care வெள்ள நிவாரண நன்கொடை திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது!
நீங்களும் உதவ நினைத்தால், நாளை Cheras Lotus கார் நிருத்துமிடத்திற்கு வந்து உளர்ந்த உணவுகள், குழந்தைகளுக்கான diapers, குளியலறை உபகரணங்கள் மாதிரியான அத்யாவசிய பொருட்களை வழங்கலாம்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather