Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

KL Masjid India நில அமிழ்வு இடம் !

Nov 20, 2024


kl masjid india நில அமிழ்வு இடம் !

 

KL Masjid India-வில்,  Wisma Melayu கட்டடமருகே நில அமிழ்வு ஏற்பட்ட இடம், டிசம்பர் இறுதிக்குள் திறக்கப்படும் ! 

பழுதுப்பார்ப்புப் பணிகள் திட்டமிட்டப்படி நிறைவடைந்தால், அப்பகுதி முழுவதுமாகத் திறக்கப்படும் என கோலாலம்பூர் மாநகர் மன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. 

இவ்வேளையில், ஜாலான் மஸ்ஜிட் இந்தியா சாலையின் ஒரு பகுதி, மீண்டும் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டிருப்பதாக DBKL கூறியது. 

நவம்பர் 10 முதல் திறக்கப்பட்ட அப்பகுதி, ஜாலான் மஸ்ஜித் இந்தியா போலீஸ் குடில் மற்றும் வணிகத் தளங்களுக்கு இடையிலான பாதையை உட்படுத்தியுள்ளது. 

கடந்த ஆகஸ்ட் மாதத்தில், அவ்விடத்தில் நிலம் உள்வாங்கியதில், இந்தியப் பிரஜையான 48 வயது விஜயலட்சுமி, விழுந்து காணாமல் போனார். 

--------- 

அலுவலகம் அல்லாத நேரத்தையும் சேர்த்து, வாரத்தில் 45 மணிநேரமும் வேலை செய்வது நியாயமில்லை என Bagan  நாடாளுமன்ற உறுப்பினர் Lim Guan Eng தெரிவித்துள்ளார். 

அதிகாரபூர்வமற்ற அரசு ஊழியர்களின் பணி நேரத்தை, தற்போதுள்ள காலத்துடன் ஒப்பிடுகையில் அதிகரிப்பது நியாயமற்றது என அவர் கூறினார். 

வாரத்திற்கு 42 மணிநேரமாக இருக்கும் தற்போதுள்ள வேலை நேர விகிதம், டிசம்பர் 1 முதல் வாரத்திற்கு 45 மணிநேரமாக அதிகரிக்கப்படும்.

இதுபோன்ற நடவடிக்கை, அலுவலகத்தில் உள்ள தொழிலாளர்களுக்கும், பதவியில் இல்லாதவர்களுக்கும் இடையே மோதலை ஏற்படுத்தும் என்றாரவர். 

-------- 

புதிய அடையாள அட்டை அறிமுகப்படுத்தும் திட்டம் இறுதிக் கட்டத்தில் உள்ளதாக, உள்துறை துணையமைச்சர் Shamsul Anuar Nasarah தெரிவித்துள்ளார். 

தேசிய பதிவு இலாகா மூலம் 2012 முதல் மக்களுக்கு வழங்கப்பட்ட தற்போதைய அடையாள அட்டைக்குப் பதிலாக, அந்த புதிய அடையாள அட்டை, மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடனும், சமீபத்திய தொழில்நுட்ப பாதுகாப்பு முன்னேற்றங்களுடனும் வடிவமைக்கப்பட்டிருக்கும் என அவர் கூறினார். 

-------- 

அனைத்து பேருந்து நடத்துனர்களும், தங்கள் பேருந்துகளில் 3-பின் மின் சாக்கெட்டுகள் மற்றும் USB இணைப்புகளை பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.   

விரைவுப் பேருந்தில் தொலைபேசியை சார்ஜ் செய்யும் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் மரணத்திற்கு, முறையற்ற wiring தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, போக்குவரத்து அமைச்சு அவ்வாறான உத்தரவை வழங்கியது. 

---------- 

தெரெங்கானுவில் வெள்ளத்தால் ஆயிரத்து 800 பேர் பாதிக்கப்பட்டு, 13 வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather