← Back to list
காவல்துறையினர் குற்றச்செயல்களில்!
Nov 15, 2024
PDRM-இன் பணி கலாச்சாரம் மற்றும் நெறிமுறை ஆகியவற்றில், கடுமையான மாற்றத்திற்கு, தேசிய காவல்படை தலைவர் அழைப்பு விடுத்துள்ளார்.
பல காவல்துறையினர் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதை அடுத்து, அவர் அவ்வாறு கூறினார்.
இவ்வாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் 23 காவல் அதிகாரிகள் வணிகக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது, பெரும் கவலையை ஏற்படுத்தியிருக்கின்றது என்றாரவர்.
அது, கடந்தாண்டு முழுவதும் கைது செய்யப்பட்ட, 22 காவலதிகாரிகளை விட அதிகமாகும் என அவர் சொன்னார்.
----------
அண்மையில், Treler மற்றும் லோரிகளை உட்படுத்திய, கொடூரமான சாலை விபத்துகள் பதிவாகி வரும் நிலையில், அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படவிருப்பதாக Bukit Aman தெரிவித்துள்ளது.
சாலை பாதுகாப்பு விதிமுறைகளை மீறுவது, குறிப்பாக ஆபத்தான விபத்துகத்துகளை ஏற்படுத்தும் வாகனங்களை இயக்கும் நிறுவனங்கள் மீது, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அது சொன்னது.
பினாங்கில் ,இவ்வார தொடக்கத்தில் ஓடிக்டிக் கொண்டிருந்த Trailer லாரி ஒன்றிலிருந்து container விழுந்து கார் ஒன்றை நசுக்கியதில், 21 வயது பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
--------
பேராக் ஈப்போவில் தனது உறவுக்கார மாதுவை கொலை செய்ததாக 21 வயதான இளைஞன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
விரக்தியினாலும், அதிருப்தியினாலும் அவன் அம்மாதுவை கொலை செய்திருக்கலாம் என நம்பப்படுவதாக, முன்னதாக செய்திகள் தெரிவித்தன.
---------
இன்று பிற்பகல் வாக்கில் பெய்த கனமழையால் தலைநகரிலுள்ள Jalan Pudu, Petaling Street உட்பட சில பகுதிகளில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக, கோலாலம்பூர் மாநகர் மன்றம் தெரிவித்திருக்கின்றது.
---------
இந்தியா புதுடெல்லி, கடந்த சில நாட்களாகவே மோசமான புகைமூட்டம் சூழ்ந்து காணப்பட்ட நிலையில், தற்போது காற்றின் தரம் படுமோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு காற்று தூய்மைக் கேட்டுக் குறியீடு அபாய அளவை எட்டியதாக, டெல்லி வானிலை, காற்றுத் தர எச்சரிக்கை தரப்பு கூறியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather