← Back to list
வெள்ள நிவாரண மையங்கள் அமைக்கப்படும் !
Nov 08, 2024
Nadma , எட்டு புதிய நிரந்தர வெள்ள மீட்பு மையங்களை அமைக்கும் !
அதில் ஒன்று ஏற்கெனவே ஜொகூர் Kota Tinggi-யில் கட்டி முடிக்கப்பட்டு விட்டதாக அது கூறியது.
அதில் 400 பேர் வரை தங்கலாம் என அது சொன்னது.
மற்ற ஏழு மையங்கள், பினாங்கு, பேராக், கிளாந்தான், தெரெங்கானு, சபா சரவாக் ஆகிய மாநிலங்களில் கட்டப்படும்.
அந்த மையங்கள், 15 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக, அந்நிறுவனம் மேலும் சொன்னது.
அது, தற்காலிக வெள்ள நிவாரண மையங்களாக, பள்ளிகளை நம்பியிருப்பதைக் குறைக்கும் முயற்சிகளின்,ஒரு பகுதியாகும் என Nadma விளக்கியது.
--------
தற்போது தொடங்கியுள்ள வடகிழக்கு பருவமழை, இம்மாத இறுதி தொடங்கி, அடுத்தாண்டு ஜனவரி வரை உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மலேசிய வானிலை ஆய்வு மையத்ததின் இயக்குநர் Dr Mohd Hisham Mohd Anip அவ்வாறு கூறியுள்ளார்.
அப்பருவ மழைக்காலம் நெடுகிலும், 20 விழுக்காடு முதல் 40 விழுக்காடு வரை மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அது கடந்தாண்டை விட அதிகம் என மெட் மலேசியா சொன்னது.
-------
DAP தலைவர் Lim Guan Eng-கை அவதூறாகப் பேசியது நிரூபிக்கப்பட்டிருப்பதை அடுத்து, முன்னாள் பிரதமர் Tan Sri Muhyiddin Yassin, அவருக்கு நஷ்ட ஈடாக பதிமூன்றரை லட்சம் ரிங்கிட் கொடுத்தாக வேண்டும் என, KL உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
அவர் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாக, Muhyiddin முன்னதாகக் கூறியிருந்தார்.
----------
தெரெங்கானுவில் வர்த்தகத் தொகுதிகள் புதுப்பிக்கப்படும் கடைக்கு, 17 வயது மாணவர் ஒருவர் கட்டுமான பொருட்களைக் கொண்டு சென்றபோது, அப்பொருட்கள் அவர் மீது விழுந்ததில் மரணமடைந்துள்ளார்.
அந்த கட்டுமானப் பொருட்கள், அம்மாணவரின் தலைக்கு மேல் இருந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
----------
கேடட் பயிற்சி மாணவரை, சூடான இஸ்தெரி பெட்டியைக் கொண்டு காயப்படுத்தி பகடிவதை செய்ததாக, மூத்த கேடட் அதிகாரி மீது இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather