← Back to list
நெகிழி பையை ஒழிக்க வேண்டும்!
Nov 07, 2024
நாடு முழுவதும் 2026ஆம் ஆண்டில் நெகிழி பைகள் பயன்பாட்டை முற்றிலுமாக நிறுத்த பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இயற்கை வள, சுற்றுசூழல் பாதுகாப்புத் துறை அமைச்சர் Nik Nazmi அவ்வாறு கூறினார்.
தற்போது இதுவரை நெகிரி செம்பிலான், பினாங்கு, கோத்தா கினாபாலு, சபா ஆகிய மாநிலங்களில் இக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது.
கூட்டரசுப் பிரதேசத்தில் மீண்டும் பயன்படுத்தும் நெகிழி பைகளை வழங்குவதில்லை.
மாறாக மக்கும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
----------
உயர்கல்விக் கூட நிலையங்களில் பகடிவதை நடைபெறுவதை நாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்கிறது தற்காப்பு அமைச்சு !
கோலாலம்பூரில் உள்ள பல்கலழைக்கழகமொன்றின் மாணவர் ஒருவர் பகடிவதைக்குள்ளான சம்பவத்தைத் தொடர்ந்து, அங்கு பயிலும் மாணவர்கள், எதிர்காலத்தில், அதனால் காயத்திற்குள்ளாகுவது அல்லது மரணம் ஏற்படும் சம்பவங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகளும், விதிமுறைகளும் எடுக்கப்படவுள்ளது.
மாணவர்களைக் கண்காணிப்பதற்கு வார்டன்களை அதிகரிப்பதோடு, அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்படும் வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவ்வமைச்சு சொன்னது.
---------
சிலாங்கூர் அம்பாங்கில் 1 மில்லியன் ரிங்கிட்டுடன் காணாமல் பை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை காணாமல் போனதாகக் கூறப்படும் 1 மில்லியன் ரிங்கிட் ரொக்கம் அடங்கிய பை, அம்பாங்-கோலாலம்பூர் விரைவுச் சாலைக்கு செல்லும் ஜாலான் உலு கிளாங்கில் கண்டெடுக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையில், பணத்தை ஏற்றிச் சென்ற பாதுகாப்பு வேன் அம்பாங்கில் உள்ள ஒரு வங்கியிலிருந்து கோலாலம்பூருக்குச் சென்று கொண்டிருந்த போது, அப்பை கீழே விழுந்திருக்கலாம் என நம்பப்படுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
----------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,900-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 8 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather