← Back to list
ரயில் திட்டம் தாமதம் !
Nov 04, 2024
ஜொகூர்பாரு - Gemas ரயில் திட்டத்தில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மலேசியா - தாய்லாந்து எல்லையில் உள்ள Padang Besar-ரில் ஏற்கெனவே உள்ள ரயில் பாதையை, படிப்படியாக விரிவுபடுத்த முன்னதாகத் திட்டமிடப்பட்டது.
ஆனால் Gemas வழியாக தெற்கு நோக்கிச் செல்லும் பாதையில் ஜொகூர் Segamat மாவட்டத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
Gemas முதல் Segamat வரையிலான 26 கிலோமீட்டர் தொலைவிலான மின்சார ரயில் சேவை, அக்டோபரில் தொடங்குவதாக இருந்தது.
முன்னதாக இந்தச் சேவை ஜூலையில் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் புதிய ரயில் சேவை இரண்டாவது முறையாக தாமதமாகியுள்ளது.
-------
MyTax செயலி மூலம், பணத்தைத் திரும்பப்பெறும் நிலை இணைப்பை, வருமான வரி வாரியம் ஒரு போதும் அனுப்பியதில்லை !
மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் இது போன்ற பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என அவ்வாரியம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
அனுமதியின்றி அச்செயலியில் எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படாதது என்பதோடு, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என LHDN சொன்னது.
--------
இன்று அதிகாலை அம்பாங் Pandan Indah-வில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி சீல் வைக்கப்படும் !
ஒரே மாதத்தில் ஒரே இடத்தில் ஏற்பட்ட இரண்டாவது நிலச்சரிவு இதுவாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று அதிகாலையில் நடந்த அந்த இரண்டாவது நிலச்சரிவு சம்பவத்தில், காரொன்று சேதமடைந்த நிலையில், யாரும் பாதிப்படையவில்லை.
-------
மாற்றுத்திறனாளி e-hailing ஓட்டுநரை தாக்கி காயப்படுத்தியதற்காக, VVIP ஒருவரின் பாதுகாப்பு உதவியாளருக்கு ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
--------
பாகிஸ்தானின் இரண்டாம் பெரிய நகரான லாகூரில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளதால் சுமார் ஒரு வாரத்துக்குத் தொடக்கப் பள்ளிகளை மூடப்போவதாக அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
மோசமான காற்றுத் தூய்மைக்கேட்டிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க அந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
காற்றுத் தூய்மைக்கேட்டுக் குறியீடு 300-ஐத் தாண்டினால் அது ஆபத்தைக் குறிக்கிறது.
ஆனால் லாகூரில் அந்தக் குறியீடு கடந்த சனிக்கிழமையன்று, ஆயிரத்தைத் தாண்டியதாக IQAir தரவுகள் காட்டுகின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather