← Back to list
தொடர்மழைக்கு தயாராகுங்கள் !
Nov 01, 2024
வடகிழக்கு பருவமழைக் காலம் இன்னும் சில நாட்களில் தொடங்கவிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள்.
அது அடுத்தாண்டு மார்ச் மாதம் நீடிக்கும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முதல் கட்டமாக, இம்மாதமும் அடுத்த மாதமும், கிழக்குக்கரை, ஜோகூர் மற்றும் கிழக்கு மலேசியாவில் கனமழை பெய்யும் என மெட் மலேசியா சொன்னது.
அடுத்த கட்டமாக, பகாங், ஜோகூர், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் கடும் மழை பெய்யும் என அது சொன்னது.
அதே சமயம், வட தீபகற்பத்தில் ஜனவரி முதல் மார்ச் வரை வெப்ப நிலை பதிவாகலாம்.
ஆனால், இவ்வருடம் பதிவான லா நீனா வெப்பம் போல் இது இருக்காது.
--------
தீபாவளி விடுமுறையின் போது, கடந்த இரண்டு நாட்களில், சுமார் 3,200 சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 40 பேர் மரணமடைந்ததாக, புக்கிட் அமான் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஆக்டோபர் மாதம் முழுவதும் 54-ஆயிரத்துக்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 430 மரணங்கள் பதிவாகின.
----------
இதனிடையே நாட்டில் நேற்று மட்டும் 1,300-க்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 23 மரணங்கள் பதிவாகின.
-------
சிறார்களுக்கு எதிரான வன்கொடுமைகள் கடந்த ஆண்டை விட, இவ்வாண்டு அதிகரித்துள்ளதாகப் புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
--------
அடுத்தாண்டு ஜனவரி 1-ஆம் தேதி தொடங்கி, பணம் கொடுத்து டிக்கெட் வாங்கும் முறை நிறுத்தப்படுவதாக KTMB தெரிவித்துள்ளது.
--------
இந்தியா புதுடெல்லியில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது, பட்டாசு வெடிப்பதற்கான தடையை மீறியதை அடுத்து, மோசமான காற்று மாசுமாடு ஏற்பட்டுள்ளது.
30 மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொண்ட புதுடெல்லி, உலகின் மிகவும் மாசுபட்ட நகர்ப்புறங்களில் ஒன்றாகவும்,நெரிசல் மிகுந்த சாலைகளாகவும் பட்டியலிடப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather