← Back to list
My50, e-wallet-டில் புதுப்பிக்கலாம்!
Oct 24, 2024
My50 மாதாந்திர பயணப் Pass-சை விரைவில் Touch ‘n Go e-wallet-டிலேயெ புதுப்பிக்கலாம்.
அதனுடைய குறிப்பிட்ட சில அம்சங்கள் தற்போது e-wallet-ட்டினுள் இணைக்கப்பட்டு வரும் நிலையில், அந்த புதிய முறையை அடுத்த சில மாதங்களில் My50 பயனர்கள் அனுபவிக்கலாம் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
My50-யைப் பயன்படுத்துபவர்கள், தற்போது LRT நிலைய முகப்புகளில் மட்டுமே அதனை புதுப்பிக்க முடியும்.
எனவே, E-walllet-டில் அதனை புதுப்பித்துக்கொள்ளும் முறையானது, My50 Pass பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றும், பொதுப் போக்குவரத்தின் பரந்த பயன்பாட்டை ஊக்குவிக்கும் என்றும் அமைச்சு சொன்னது.
---------
பெருநாள் காலங்களில் விமான டிக்கெட்டுகளுக்கான உதவுத் தொகை வழங்குவது குறித்து அரசாங்கம் அறிவிக்கும்.
அது எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த தகவல்களை, போக்குவரத்து அமைச்சர் Anthony Loke வெளியிடவில்லை.
ஆனால், பெருநாள் காலத்திற்கான உதவித் தொகை ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
-----------
கோலாலம்பூரில் கடந்த வாரம் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தின் போது, அதிகாரிகள் உடனடி நடவடிக்கைகளை எடுக்க தவறியதாக கூறப்பட்டு வருவதை, அரசாங்கம் மறுத்துள்ளது.
கோலாலம்பூர் மாநகர் மன்ற அதிகாரிகளும், நீர்ப்பாசன வடிகால் துறை அதிகாரிகளும், அச்சம்பவத்தின் போது, வெள்ளநீரை வெளியேற்றும் நடவடிக்கையில் இருந்ததாக, கூட்டரசு பிரதேச அமைச்சர் Dr Zaliha Mustafa தெரிவித்துள்ளார்.
------------
கெடா, பினாங்கு, பெர்லிஸ் உட்பட பல மாநிலங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்மாநிலங்களின் பெரும்பாலான பகுதிகளில், மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என Met Malaysia கணித்துள்ளது.
----------
பேராக் ஈப்போவில், 13 வயது பள்ளி மாணவியை காரில் இடித்து தப்பியோடிய சந்தேக நபரை காவல்துறை கைதுச் செய்துள்ளது.
விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டிருந்த அம்மாணவியை, அந்த சந்தேக நபர் ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தி மோதி காயப்படுத்தினார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather