← Back to list
PTPTN-னை திருப்பி செலுத்த B-40-க்கு தேவையில்லையா?
Oct 22, 2024
B40 குழுவில் இருந்து PTPTN கடன் வாங்கியவர்கள் செலுத்த வேண்டிய கடனை ரத்து செய்யும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை.
அது அரசாங்கத்துக்கு அதிக நிதிச்சுமையை ஏற்படுத்தும் என உயர்கல்வி அமைச்சு மக்களவையில் தெரிவித்துள்ளது.
நிதியின் நீண்ட கால நிலைத்தன்மையை உறுதி செய்வதற்காக, PTPTN-னுக்கான புதிய நிதி மாதிரிகள் ஆராயப்பட்டு வருவதாக, அமைச்சு கூறியது.
தற்போது, PTPTN புதிய மாணவர்களின் கல்விக்கு நிதியளிப்பதற்காக, கடந்த காலத்தில் கடன் வாங்கியவர்களிடமிருந்து திருப்பிச் செலுத்துவதை நம்பியுள்ளது.
--------
நாட்டில் கடுமையான வறுமையை ஒழிக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை, இன வேறுபாடின்றி மேற்கொள்ளப்படும்.
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இம்மாதம் இதுவரை புதிதாக பதிவு செய்யப்பட்ட 65 விழுக்காடு வறுமை தொடர்பான சம்பவங்கள், வெற்றிகரமாக தீர்க்கப்பட்டுவிட்டதாக, Datuk Seri Anwar Ibrahim தெரிவித்தார்.
வறுமையில் அதிகமான மலாய்க்காரர்கள் இருந்தாலும், அதைவிட அதிகமாக இந்திய சமூகம் உள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
--------
தடைசெய்யப்பட்ட இடங்களில் புகைபிடிப்பதை தடுக்க, அதிகாரிகள் தங்களின் ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவிருக்கின்றனர்.
அவர்கள், அதிகமான புகார்களைப் பெறும் பகுதிகளில், கவனம் செலுத்துவார்கள்.
தடை செய்யப்பட்ட இடங்களில் புகைப்பிடிப்பவர்களை பார்த்தால், தமதமைச்சின் செயல்பாட்டு அறையிடம் புகார் கொடுக்கும்படி, சுகாதார அமைச்சு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
--------
பேராக் ஈப்போவில் நேற்று ஏற்பட்ட வெடிப்பு மற்றும் நடுக்கத்திற்கான காரணம் இன்னும் மர்மமாகவே உள்ளது.
சமூக ஊடகங்களில் கூறி வருவது போல், அது Orionids விண்கல் பொழிவால் ஏற்பட்டதல்ல என மலேசிய விண்வெளி ஆய்வு நிறுவனம் தெளிவுப்படுத்தியுள்ளது.
விண்கல் பொழிவுகள் பொதுவாக வளிமண்டலத்திலேயே எரிந்து சிதறிவிடும் என அந்நிறுவனம் கூறியது.
---------
வளர்ப்பு முயலுக்கு உணவளிக்காமல் உயிரிழக்க வைத்த வியாபாரி மீது, இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather