← Back to list
கலால் வரியை சாதகமாக பயன்படுத்தாதீர்!
Oct 21, 2024
2025 பஜ்ஜெட்டில் முன்மொழியப்பட்ட சர்க்கரை பானங்கள் மீதான கலால் வரி, உணவு, சக்கரை பானங்களின் விலைகளை பாதிக்காது.
வணிக உரிமையாளர்கள், தங்கள் கடைகளில் உணவு, பானங்களின் விலைகளை உயர்த்துவதற்கு, அந்த வரியை ஒரு காரணமாகப் பயன்படுத்த கூடாது என உள்நாட்டு வாணிக, வாழ்க்கை செலவீன அமைச்சு தெரிவித்துள்ளது.
பொது மக்கள் பயன்படுத்தும் வழக்கமான சர்க்கரையின் விலையில், எந்த மாற்றமும் இல்லை என அது தெளிவுப்படுத்தியது.
------------
வெளிநாட்டு தொழிலாளர்களை, ஊழியர் சேம நிதி வாரியத்தில் சேர வைக்கும் முடிவு, அனைத்துலக தரத்தைப் பூர்த்தி செய்வதாக, அவ்வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை, 2025 பஜ்ஜெட் தாக்கல் செய்யும் போது, மலேசிய அல்லாத அனைத்து தொழிலாளர்களும் EPF-க்கு பங்களிப்பதை கட்டாயமாக்க, அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக, பிரதமர் கூறினார்.
----------
சிலாங்கூர் Ampang Jaya-வில், இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணை, இஸ்தெரிப் பெட்டியால் சூடு வைத்து, சுத்தியலைக் கொண்டு தாக்கியதாகக் கூறப்படும் இரண்டு பென்களை காவல்துறை கைது செய்துள்ளது.
----------
கடனை திருப்பிச் செலுத்த முடியாதவரகளின் வீடுகளில் சிவப்பு சாயம் வீசுவது, பெட்ரோல் குண்டுகளை எறிவது என, ஆறு மாநிலங்களில் சதிநாச வேலைகளில் ஈடுபட்டு வந்த வட்டி முதலை கும்பலொன்று முறியடிக்கப்பட்டுள்ளது.
-----------
சபா மற்றும் லபுவானில் புதன்கிழமை தொடங்கி மூன்று நாட்களுக்கு, தொடர் மழை பெய்யலாம் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather