Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Kalakkal kaalai Current Show

Kalakkal kaalai

You Asked! We Listened! Everything is new on the Kalakkal Kaalai plate! Kickstarts your weekday mornings with our sassy pair, Uthaya and Vikadakavi from 6 am to 10 am.

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

Lock-up-களை மேம்படுத்த வேண்டும்!

Oct 16, 2024


lock-up-களை மேம்படுத்த வேண்டும்!

 

2025 பட்ஜெட்டில், காவல் நிலையங்களில் விசாரணை கைதிகளை தடுத்து வைக்கும் அறைகளை மேம்படுத்த, நிதி ஒதுக்க வேண்டும்.  

சில அறைகள் பழையவை என்றும், அவற்றின் நிலைமைகள் மோசமாக இருப்பதாகவும், மலாயா பல்கலைக்கழகத்தின் குற்றவியல் நிபுணர்,பேராசிரியர் Dr Haezreena Begum தெரிவித்துள்ளார். 

அவ்வறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், இன்னும் எந்த குற்றங்களிலும், குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்படாததால், அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்பட வேண்டும் என அவர் கூறினார். 

வரும் வெள்ளிக்கிழமை பிரதமர் 2025 பஜ்ஜெட் தாக்கல் செய்யவிருக்கிறார்.

----------- 

நேற்று Selangor Taman Melawati-யில் ஏற்பட்ட நிலச்சரிவு, அப்பகுதியின் அதிகப்படியான வளர்ச்சியால் எல்ல என மாநில Menteri Besar தெரிவித்துள்ளார். 

பத்து ஆண்டுகளுக்கு முன்புதான் கடைசியாக, வளர்ச்சிக்கான திட்டமிடல் அனுமதி வழங்கப்பட்டது என்றும், அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் உயர் அடர்த்தி கொண்டவை அல்ல என்றும் அவர் கூறினார். 

மாறாக, உள்கட்டமைப்பு பராமரிப்பு இல்லாததால் மண்சரிவு ஏற்பட்டிருக்கலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.  

--------- 

இதனிடையே, Taman Melawati நிலச்சரிவு குறித்த முதற்கட்ட அறிக்கையை, பொதுப்பணித் துறை நாளை தாக்கல் செய்யும். 

அவ்வறிக்கை நிபுணர்களின் ஆலோசனைகள் மற்றும் ஊராட்சி மன்றத்துக்கான பரிந்துரைகள் ஆகியவற்றை உட்படுத்தியிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

---------- 

தீபாவளி விடுமுறையின்போது, தாய்லாந்துக்கு செல்லும் மலேசியர்களின் பாதுகாப்புக்கு, அந்நாட்டு காவல்துறை உத்தரவாதம் அளித்துள்ளது. 

அங்கு பல தாக்குதல்கள் நடந்து வருவதை அடுத்து, சுற்றுப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிச் செய்ய, அந்நாட்டு அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கு நிலவி வரும் தாக்குதல்களைத் தொடர்ந்து, அதிக எச்சரிக்கையுடன் இருக்கும்படி, தீபாவளி விடுமுறையின் போது தாய்லாந்திற்குச் செல்ல திட்டமிட்டுள்ள மலேசியர்களை முன்னதாக, IGP Tan Sri Razarudin Husain கேட்டுக்கொண்டார்.

---------- 

நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் தற்போது கோலாலம்பூரும் சேர்ந்துள்ளது. 

ஆனால் ஆக அதிகமாக, பஹாங்கில் 1,700-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பேராக்கில் ஆயிரத்து 170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather

 
Ads With Us Ads With Us Ads With Us