← Back to list
சம்மன்களை கட்டி முடியுங்கள் !
Oct 04, 2024
B1 மற்றும் B2 ரக மோட்டார் சைக்கிள் உரிமத்தை B-க்கு மாற்றும் திட்டத்திற்கு பதிய விரும்புபவர்கள், நிலுவையில் உள்ள போக்குவரத்து சம்மன்களை முதலில் கட்டி முடிக்க வேண்டும் !
சாலை போக்குவரத்துத் துறை, மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களை அவ்வாறு கேட்டுக்கொண்டுள்ளது.
நிர்ணயிக்கப்பட்ட அளவுகோல்களுக்கு தாங்கள் இணங்கிய போதிலும், அவ்வுரிமத்தை B-க்கு மாற்றுவதற்கு தகுதி பெறாமல் போவதாக, பல மோட்டார் சைக்கிளோட்டிகளின் புகார்களுக்கு பதிலளிக்கும் வகையில், அத்துறை அவ்வாறு சொன்னது.
B1 மற்றும் B2 ரக மோட்டார்சைக்கிள் உரிமத்தை, B-க்கு உயர்த்துவதற்கான தளர்வு வழங்கப்படுவதாக முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.
---------
பதிவில் கோளாரு ஏற்பட்டதற்கு MyDigital ID மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது!
அக்கோளாருகளுக்கு தெளிவான புகைப்படத்தை சமர்ப்பிக்காதது உள்ளிட்ட பயனர்கள் சார்ந்த பிரச்னைகள் பல, காரணமாக அமைவது தொடக்க கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அது கூறியது.
எனவே, தற்போதைக்கு அம்முறையில் பதிவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லையென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
---------
அதிக வாசிப்பு இடங்களை வழங்கவும், புத்தகக் கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வணிக மையங்கள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.
கணக்கெடுக்கப்பட்டவர்களில் கிட்டத்தட்ட 58 விழுக்காடினர் புத்தகக் கடைகளில் படித்து மகிழ்ந்ததாகவும், கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினர், உணவகங்களில் படித்து மகிழ்ந்ததாகவும், அண்மைய ஆய்வில் கண்டறியப்பட்டதை அடுத்து, தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு, அவ்வணிக மையங்களை அவ்வாறு செய்ய வலியுறுத்தியுள்ளது.
அனைத்து மலேசியர்களும் சிறந்த வாசிப்பு தொகுப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதற்கான பரிந்துரைகளை, மதிப்பாய்வு செய்து செயல்படுத்துவதாகவும், அமைச்சு மேலும் சொன்னது.
---------
GISB-யின் பராமரிப்பு இல்லம் ஒன்றில் வேலை செய்யும் 35 வயது பராமரிப்பாளர் மீது, இன்று நீதிமன்றத்தில் சிறார் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அவர் தம்மீதான குற்றச்சாட்டை மறுத்தார்.
--------
கெடா, பினாங்கு, பேராக், சிலாங்கூர், ஜொகூர் உட்பட சில மாநிலங்களில், இன்று மாலை 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என, மலேசிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather