← Back to list
GISB முறைகேடு!
Sep 25, 2024

GISB நிறுவனம் முறைகேடு தொடர்பில் கைதான 24 பேரின் தடுப்புக் காவல் நான்கு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் அதன் உயர்மட்ட தலைமையின் மற்ற உறுப்பினர்களும் அடங்குவர்.
அந்நிறுவனத்தின் கீழ் இயங்கும் பராமரிப்பு இல்லங்களில், நூற்றுக்கணக்கான பிள்ளைகள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு வந்த விவகாரம் தொடர்பில் விசாரிக்க, அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்பில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கிட்டத்தட்ட 600 குழைந்தைகள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
----------
இதனிடையே, அந்நிறுவனத்தை பின்பற்றுபவர்கள், தற்போது நடந்து வரும் விசாரணையின் காரணமாக நாட்டை விட்டு வெளியேறியிருக்கலாம் என தேசிய காவல்படை தலைவர் சந்தேகிக்கின்றார்.
ஆனால், அவர்கள் அந்நிறுவனத்தின் தலைமையின் நிதியை சார்ந்திருப்பதாகவும், இந்த மூத்த அதிகாரிகளின் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதனால், அவர்கள் தங்களின் நிதி, சம்பளம் மற்றும் பயணத்திற்கு தேவையான ஆதாரங்களுக்கான அணுகலை இழந்துள்ளதால், அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல வாய்ப்புகள் குறைவு என, IGP சொன்னார்.
---------
சமூக ஊடக பிரபலம் இஷாவின் மரணம் தொடர்பில், ஆடவர் ஒருவருக்கு 12 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அப்பெண்ணின் தாயை அவமானப்படுத்தியது, ஆபாசமான கருத்துகளை வெளியிட்டது என இரு குற்றங்களை ஒப்புக்கொண்ட பிறகு, அந்த லோரி ஓட்டுநருக்கு அத்தண்டனை வழங்கப்பட்டது.
ஜூலை மாதம் இணைய பகடிவதைக்கு ஆளான இஷா, KL Setapak-கில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
---------
KLIA-வின் Bunga Raya வளாகத்தில் இன்று காலை ஏற்பட்ட நில அமிழ்வு இடத்தில், அதிகாரிகள் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருவதாக மலேசிய விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன.
KLIA-வின் இரண்டு முனையங்களுக்கான வழித்தடங்களில் அந்த நில அமிழ்வு, பாதிப்பை ஏற்படுத்தவில்லை எனவும், அதே சமயம் அதன் ஓடுபாதைகள் அப்படியே உள்ளதென்றும் அது சொன்னது.
--------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 10 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather