← Back to list
கெடாவில் மோசமடைந்துள்ள வெள்ளம்!
Sep 19, 2024

கெடாவில் வெள்ளத்தால் பாதிகப்பட்டோரின் எண்ணிக்கை நான்காயிரத்தை தாண்டியுள்ளது.
அம்மாநிலத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில், பெரிய அலைகள் காரணமாக Langkawi-யிலிருந்து Kuala Kedah-க்கு செல்லும் திரும்பும், மொத்தம் 10 கப்பல் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனிடையே, Pantai Chenang மற்றும் Pantai Tengah கடற்கரையில், சிவப்பு கொடி எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.
அப்பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள், குறிப்பாக சுற்றுப்பயணிகள் கவனமுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகின்றனர்.
--------
மற்றொரு நிலவரத்தில், அம்மாநிலத்தில் வெள்ளத்தால் வீடுகள் மோசமாக பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஈராயிரம் ரிங்கிட் உதவி நிதியை, மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.
அங்கு 1,178 குடும்பங்களைச் சேர்ந்த 3,966-க்கும் மேற்பட்டோர் 31 வெவ்வேறு தற்காலிக துயர்துடைப்பு மையங்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
பினாங்கில் 568 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பெர்லிசில் 149 பேர் தற்காலிக நிவாரண மையங்களில் அடைக்கலம் நாடியுள்ளனர்.
----------
ஆண்டின் முதல் 7 மாதங்களில், மரங்கள் விழுந்த சம்பவம் தொடர்பான 2,500 புகார்களை, தீயணைப்பு மீட்புத் துறை பெற்றுள்ளது.
அண்மைய நாட்களாக, பலத்த காற்று மற்றும் புயல் காரணமாக, ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்த சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
----------
இன்று காலை KL-லில் கைதான, GISB நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி மற்றும் அவரது மனைவி உட்பட 19 பேர் இன்று முதல் 7 நாட்களுக்கு தடுத்து வைக்கப்படுகின்றனர்.
அந்நிறுவனத்திற்கு எதிராக நடந்து வரும் விசாரணைக்கு உதவ, அவர்கள் தடுத்து வைக்கப்படுகின்றனர்.
----------
மற்றொரு நிலவரத்தில், Negeri Sembilan Kuala Pilah-வில் உள்ள மத பள்ளியொன்றில், ஆண் பிள்ளைகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, GISB நிறுவனத்திற்கு தொடர்புடைய மூன்று ஆடவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
---------
இதனிடையே, நாட்டில் மரங்கள், குறிப்பாக பழமையான மரங்களை வெட்டாமல், அப்படியே வைத்து பராமரிப்பதற்கான, சில நீண்ட கால நடவடிக்கைகளை அரசாங்கம் பரிசீலிக்கவுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather