← Back to list
தண்டனையிலிருந்து தப்ப முடியாது !
Sep 10, 2024
Johor Bahru-வில் அண்மையில் ஏற்பட்ட துர்நாற்ற மாசுமாட்டிற்கு காரணமானவர்களிடம் அணுசரனை காட்டப்படாது என மாநில அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது என இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு கூறியது.
தற்போது அதிகாரிகள், அதன் தொடர்பில் இன்னும் விசாரணை நடத்தி வருவதாக அமைச்சர் Nik Nazmi Nik Ahmad சொன்னார்.
---------
இதனிடையே, துர்நாற்ற மாசுபாட்டு காரணமாக, இதுவரை மூவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதே சமயம், சுமார் 140 பேர் குமட்டல் உட்பட சில சாதாரண உபாதைகளுக்கு ஆளாகினர்.
------
மற்றொரு பக்கம், அம்மாசுபாடு காரணமாக, Sungai Tebrau மற்றும் Sungai Skudai அருகிலுள்ள மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட மூன்று பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
மேற்கட்ட அறிவிப்பு வெளிவரும் வரை, சம்பந்தப்பட்ட பள்ளிகள் இணைய கற்றல் கற்பித்தல் முறையை மேற்கொள்ளும்.
--------
ஜொகூர், மூவாரில் பள்ளி மாணவிகளை காணொலியாகப் பதிவுச் செய்து தனது TikTok-கில் பதிவேற்றிய 24 வயது பேருந்து ஓட்டுனர் இன்று நீதிமன்றத்தில் இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கினார்.
குழந்தைகள் மீதான உடல் மற்றும் உடல் சாரா பாலியல் வன்கொடுமை ஆகியவையே அக்குற்றச்சாட்டுகளாகும்.
--------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, 10 மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather