← Back to list
5ஆவது நாள் தொடரும் தேடல்!
Aug 27, 2024

தலைநகர், Jalan Masjid Indiaவில் நில அமிழ்வில் காணாமல் போன மாதுவைத் தேடும் பணிகள், இன்று ஐந்தாவது நாளாகத் தொடருகின்றன! 
Jetting, Flushing உள்ளிட்ட முறைகள் பயன்படுத்தப்பட்டு வருவதாக, தேடல் மீட்புப் படை தகவல் வெளியிட்டுள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஏற்பட்ட திடீர் நில அமிழ்வில் இந்திய சுற்றுப் பயணியான 48 வயது மாது ஒருவர் ஏறக்குறைய எட்டு மீட்டர் ஆழத்தில் விழுந்து சிக்கிக் கொண்டார். 
--------  
கிளாந்தான், நெங்கிரி இடைதேர்தல் பிரச்சாரத்தில் மூன்று R, அதாவது இனம், மதம், அரச முறை குறித்துப் பேசியதாக Bersatu கட்சித் தலைவர், Tan Sri Muhyiddin Yassin மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது! 
Gua Musang Sessions நீதிமன்றத்தில் தம்மீது சுமத்தபட்ட தேச நிந்தனை குற்றச்சாட்டை அந்த முன்னாள் பிரதமர் மறுத்துள்ளார். 
-------- 
பேராக், சுஙாய் சிப்புட்டில் பத்து வயதிலான பூர்வகுடி சிறுமியைக் கொலை செய்தாதாக, 17 வயது சிறுவன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது! 
சில நாட்களாகக் காணாமல் போனதாகக் கூறப்பட்ட அச்சிறுமி பின்னர், Kampung Bersahவிலுள்ள சதுப்பு நிலம் அருகே இறந்த நிலையில் மீட்கப்பட்டாள். 
--------  
சிலாங்கூர், Petaling Jayaவில் பாலியல் தொல்லை கொடுத்ததாக நம்பப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரிடமிருந்து காவல் துறை வாக்குமூலம் பெற்றுள்ளது! 
அதன் தொடர்பில் பாதிக்கப்பட்ட உணவக உரிமையாளர் உட்பட 13 பேரிடமிருந்து வாக்குமூலம் பதிவிச் செய்யப்பட்டுவிட்டது. 
---------  
நாட்டில் கடந்த 19 மாதங்களில் மோசடிகளால் நூற்று அறுபது கோடி ரிங்கிட்டுக்கும் மேல் நட்டம் ஏற்பட்டுள்ளது. 
அவற்றுள் பெரும்பாலானவை பொருள் வாங்கும் மோசடி மற்றும், இல்லாத முதலீட்டு மோசடிகளையே உட்படுத்தியது என, காவல் துறை Harian Metroவிடம் தெரிவித்துள்ளது. 
-------- 
Telegramமில் சிறாரை உட்படுத்திய ஆபாசப் படங்கள்,போதை பொருள் விநியோகம், மற்றும் மோசடிகள் நடத்தப்படுவது தொடர்பில், அச்செயலியின் நிறுவனர் விசாரிக்கப்பட்டு வருகிறார். 
Telegramமின் தலைமை நிர்வாக அதிகாரியுமான அவர், கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather