← Back to list
Masjid India தேடல் தொடர்கிறது!
Aug 26, 2024
தலைநகர், Jalan Masjid India நில அமிழ்வில் காணாமல் போன மாதுவை தேட flushing எனப்படும் புதிய முறையைத் தேடல் மீட்புப் படை கையாண்டுள்ளது!
நேற்றிரவிலிருந்து இரு முறை அதனை மேற்கொண்டும், எந்த முன்னேற்றமும் இல்லை என, KL மாநகர் மன்றம் தெரிவித்திருக்கின்றது.
நேற்று நள்ளிரவு இரண்டு மணி வரை தேடல் பணிகள் நடைபெற்றன.
இன்று நான்காவது நாளாக பாதிக்கப்பட்ட பெண்ணைத் தேடும் நடவடிக்கைகள் தொடருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை அப்பகுதியில் ஏற்பட்ட நில அமிழ்வை அடுத்து, அந்த பாதையாக நடந்து சென்ற இந்தியாவைச் சேர்ந்த 48 வயது மாது ஒருவர், குழியில் விழுந்து சிக்கிக் கொண்டார்.
--------
Jalan Masjid India மற்றும் கோலாலம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைமை கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது!
பொதுமக்கள் பயப்படாமல் தங்களின் அன்றாட வாழ்க்கையைத் தொடருமாறு KL மாநகர் மன்றத் தலைவர் தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் தமது தரப்பு நடத்திய கூட்டத்தில், அப்பகுதிகளின் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
வெள்ளிக்கிழமை சம்பவத்தை அடுத்து, Masjid Indiaவில் வணிகத் தளங்கள் மூடப்பட்டு, மக்கள் நடமாட்டம் முற்றாக குறைந்திருக்கிறது.
---------
Mpox எனப்படும் குரங்கம்மை தொற்று பரவலைத் தடுக்க, நாட்டின் நான்கு பிரதான நுழைவாயில்களில் கண்காணிப்புத் தீவிரப்படுத்தப்படும்!
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம், ஜொகூர் Sultan Iskandar கட்டிடம், Sultan Abu Bakar வளாகம் ஆகியவை அதிலடங்கும்.
மேலும், வடக்குப் பகுதியில் சட்டவிரோத எல்லை தாண்டுதல்களும் கண்காணிக்கப்படுகின்றது.
--------
சிலாங்கூர், Sungai Bernam நீர் சுத்திகரிப்பு ஆலையில் மூடப்பட்டதால் ஏற்பட்ட தற்காலிக நீயோகத்தடை முடிவுக்கு வந்துள்ளது!
நேற்றிரவு பதினோரு மணி வாக்கில் பாதிக்கப்பட்ட எல்லா இருநூற்று ஆறு பகுதிகளிலும் நீர் விநியோகம் நூரு விழுக்காடு வழக்க நிலைக்குத் திரும்பியிருப்பதாக Air Selangor தெரிவித்தது.
--------
நாட்டில் நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஐநூற்று ஐம்பதாக உள்ளது!
ஆக அதிகமாக சிலாங்கூரில் நூற்று 67 பேரும், பேராக் மற்றும் நெகிரி செம்பிலானில் எறக்குறைய நூற்று நாட்பது பேரம் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather