← Back to list
கடைசி சடலம் கண்டெடுப்பு !
Aug 22, 2024

 
சரவாக் லுண்டுவில் படகொன்று கவிழ்ந்ததில் காணாமல் போன மூன்று பள்ளி மாணவர்களை தேடும் நடவடிக்கை முடிவடைந்துள்ளதாக, தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்துள்ளது. 
இன்று காலை மூன்றாவது மற்றும் கடைசி காணாமல் போன ஒரு மாணவரின் சடலம் மீட்கப்பட்டதை அடுத்து, தேடும் பணியை அத்துறை முடித்திருக்கிறது.  
அச்சம்பவத்தில் உயிரிழந்த மற்ற இருவரின் சடலங்களும் நேற்று மீட்கப்பட்டன.   
20 பேரை ஏற்றிச் சென்ற அந்த படகு, கடந்த செவாய்க்கிழமை Sungai Kayan ஆற்றில் கவிழ்ந்தது.   
---------   
பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்படும்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, காவல்துறை எப்போதும் நடவடிக்கை எடுக்கும் ! 
உள்துறை அமைச்சு அவ்வாறு உறுதியளித்துள்ளது. 
இவ்வார தொடக்கத்தில், Selangor Bandar Sunway அருகே, காவல் வீரருக்கும், ஆயுதமேந்திய கொள்ளையர் என சந்தேகிக்கப்படும் நபருக்கும் இடையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து அமைச்சு அவ்வாறு கூறியது. 
அச்சம்பவத்தின் போது அந்த சந்தேக நபர் கொல்லப்பட்ட வேளை, பொதுக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 
----------   
பிரதமர் அறிவித்த புதிய சம்பள உயர்வு நடைமுறைக்கு வந்தவுடன், அதை வணிகர்கள் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடாது ! 
அதுவே அரசு ஊழியர்களின் பெருத்த கவலையாக இருப்பதாக தெரிகிறது. 
பொருட்களின் விலைகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அவர்கள் கூறினர். 
---------   
குரங்கம்மை நோய் என்பது, கோவிட் 19-ஐ விட ஆபத்தானது அல்ல என சுகாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.   
குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தாங்களாகவே குணமடைந்துவிடுவார்கள் என்றும், அதன் பக்கவிளைவுகள், கோவிட்டை விட கொடியது அல்ல என Datuk Dr Zainal Omar தெளிவுப்படுத்தினார்.  
----------  
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,700-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்ட வேளை, ஐந்து மரணங்கள் பதிவானதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather