← Back to list
UMமில் திருவள்ளுவர் இருக்கை!
Aug 21, 2024
பிரதமர் Datuk Seri Anwar Ibrahim இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த அதிகாரப்பூர்வ பயணம் இரு நாடுகளுக்கிடையே நல்ல பலன்களைக் கொண்டு வந்துள்ளது!
நேற்று புதுடெல்லியில் உள்ள அதிபர் மாளிகையில் அன்வார் இந்திய பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த நிலையில், சில முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருக்கின்றன.
அவற்றுள் முக்கியமான ஒன்று, மலாயா பல்கலைக்கழகத்தில் திருவள்ளுவர் இருக்கையை அமைக்க இரு பிரதமர்கள் ஒருசேற இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே இந்த சிறப்பு அறிவிப்பானதை அப்பல்கலைக்கழகம் வரவேற்றுள்ளது.
இந்த ஒரு மிகப்பெரிய முயற்சிக்கு UM தேர்வாகியிருப்பது தங்களுக்கு மிகுந்த பெருமை கொள்வதாக, அதன் தமிழ் பேரவை தலைவர் Hari கண்ணன் கூறுகிறார்.
இந்த அறிவிப்புக்கு மலாயா பல்கலைக்கழகம் தான் சிறந்த தேர்வு.
இது பல்கலைக்கழகத்துக்கு மட்டுமின்றி மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் கூட பல நன்மைகளைக் கொடுக்கிறது.
அதில் முதலாவது கல்வி ரீதியான நன்மை. மாணவர்களுக்கு ஆராய்ச்சி வாய்ப்புகள் அதிகம் அமையும். இது சுற்றுலாத் துறையிலும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது.
ஆராய்ச்சுப் பணிகள் மேற்கொள்ளுதல், கல்வி மேம்பாடு உள்ளிட்ட முக்கிய விஷியங்களைத் திட்டமிட்டு வழிநடத்தும் நோக்கில், பெருமைக்குரிய, தொழில்சார் வல்லுனர் ஒருவருக்கு வழங்கப்படும் கெளரவப் பட்டமே இந்த திருவள்ளுவர் இருக்கையாகும்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather