← Back to list
அரசாங்க ஊழியர்கள் சம்பளம் உயர்கிறது!
Aug 16, 2024
வரலாறு காணாத அளவிலான பொதுச் சேவை ஊழியர்களுக்கான சம்பள சீர்த்திருத்தத்தை பிரதமர் அறிவித்துள்ளார்!
அமுலாக்கக் குழுவின் சம்பளம்15 விழுக்காடாகவும், உயர் நிர்வாகக் குழுவின் சம்பளம் ஏழு விழுக்காடாகவும் உயருவதாக Datuk Seri Anwar Ibrahim சற்று முன்னர் அறிவித்தார்.
அப்புதிய சீர்த்திருத்தமானது வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி தொடங்கி கட்டங்கட்டமாக அமுலுக்கு வரும்.
இதனிடையே, மலேசிய ஓய்வூதியத்திட்டம் SSMமை, பொதுச் சேவை ஓய்வூதிய முறை SSPAவுக்கு மாற்ற அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.
பொதுச் சேவை துறையினரின் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீது அரசாங்கம் காட்டும் அக்கறையின் அடையாளமாக அது அமைகிறது என்றார் பிரதமர்.
அரசு ஊழியர்களின் புதிய சம்பள உயர்வை சாதகமாக்கிக் கொண்டு பொருட்களின் விலையை உயர்த்த வேண்டாம்.
குறிப்பாக உணவு வியாபாரிகள் இதை நினைவில் வைத்துக் கொள்ளுமாறு பிரதமர் எச்சரித்துள்ளார்.
உள்நாட்டு வாணிக வாழ்க்கைச் செலவீன அமைச்சு அதன் தொடர்பில், தொடர்ந்து தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றாரவர்.
அடுத்ததாக, வளங்களை மேம்படுத்தவும், உற்பத்தியை அதிகரிக்கவும் சில சீர்திருத்தங்களை செயல்படுத்த அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.
அதன் கீழ் இனி பொதுச் சேவை துறையில் சேற விரும்புவோர் SPM அல்லது அதற்கு ஈடான குறைந்தபட்ச கல்வித் தகுதியைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்த புதிய அறிவிப்புக்கு ஏற்ப, அவர்களின் பொறுப்புகளும் வேலை சுமையும் அதிகரிக்கும் என பிரதமர் கூறினார்.
இதற்கு முன், பொதுச் சேவை துறையின் குறைந்த பட்ச வேலையான Gred 11றில் சேற PMR, அல்லது PT3 குறைந்த பட்ச கல்வித் தகுதியாகும்.
பொதுச் சேவை துறையினரின் அர்ப்பணிப்பைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீது அரசாங்கம் காட்டும் அக்கறையின் அடையாளமாக இன்றைய அறிவிப்புகாள் அமைகின்றன என்றார் பிரதமர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather