← Back to list
பாடகரின் திடீர் மரணம்!
Aug 16, 2024
அண்மையில் கிள்ளானில் பாடகர் ஒருவரின் மரணம், தற்போது ஒரு குற்ற சம்பவமாக கருத்தப்படவில்லை.
அவரிடம் எந்த உடல் காயங்களும் காணப்படாததால், அதுவொரு திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக Selangor காவல்துறை தெரிவித்திருக்கிறது.
அவ்வாடவரின் மரணத்தின் உண்மையான காரணத்தைக் கண்டறிய, ஆய்வகச் சோதனை முடிவுக்காக தமது தரப்பு காத்திருப்பதாக அத்துறை கூறியது.
23 வயதான அவர், காணாமல் போனதாக அறிவிக்கப்பட்ட ஒரு நாளுக்குப் பின், ஆற்றில் இறந்து கிடக்க கண்டெடுக்கப்பட்டார்.
------
Selangor Serdang மருத்துவமனையில் ஊழியர் போல் ஆள்மாறாட்டம் செய்த சிறுமி, எந்த நோயாளிகளுக்கும் மருத்துவ சிகிச்சைகளை வழங்கவில்லை.
விசாரணையின் போது அது தெரிய வந்துள்ளதாக, சுகாதார அமைச்சு தெளிவுப்படுத்தியிருக்கிறது.
அச்சிறுமி அதுபோன்று செய்தது குறித்து தமது தரப்புக்கு எந்த புகாரும் கிடைக்கவில்லையென அது கூறியது.
---------
கோலாலம்பூர் செந்தூலில் 9, வீடு புகுந்து கொள்ளையிடும் சம்பவங்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவரை, காவல்துறை கைதுச் செய்துள்ளது.
--------
முன்மொழியப்பட்ட புதிய இணைய பாதுகாப்பு மசோதா, ஆக்டோபர் மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
சட்ட சீர்திருத்த அமைச்சு, காவல்துறை மற்றும் MCMC ஆகியவற்றால், அந்த மசோதா மேம்படுத்தப்பட்டு வருவதாக தொடர்புத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
---------
இன்று காலை, பொதுச் சேவை இழப்பீட்டு முறை குறித்த அறிவிப்பை, பிரதமர் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
--------
நாளை கிளாந்தான் Nenggeri இடைத்தேர்தல் நடைபெறவிருக்கின்ற நிலையில், பொதுமக்கள் தங்களின் ஜனநாயக கடமையை செய்ய விடாமல் தடுக்கும் வகையில் செய்யும் சில தரப்புகளின் செயல்களை காவல்துறை கண்டித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather