← Back to list
Mule கணக்குக்கு மாணவர்களும் உடந்தை!
Aug 15, 2024
தங்களின் வங்கிக் கணக்குகளை மோசடிக்காரர்களுக்கு விற்கும் அல்லது வாடகைக்கு விடும் இரண்டு லட்சத்து எட்டாயிரத்துக்கும் மேற்பட்டவர்களில் பல்கலைக்கழக மாணவர்களும் அடங்குவர்!
ஐநூரு முதல் ஆயிரம் ரிங்கிட் வரை மோசடிக்காரர்கள் கொடுக்கும் பணத்திற்காக, மாணவர்கள் தங்களின் வங்கிக் கணக்குகளையும் தானியங்கி பணப்பட்டுவாடா அட்டையையும் கொடுப்பது தெரிய வந்துள்ளதாக புக்கிட் ஆமான் கூறியது.
எதிர்கால சிக்கல் அறியாது அவர்கள் செய்யும் இந்த காரியத்தால், சட்டத்தில் கடும் தண்டனை காத்திருக்கிறது.
கல்வி, வேலை என வாழ்க்கையின் அடுத்தடுத்த முன்னேற்றங்களுக்கு அந்த சட்ட நடவடிக்கை அவர்களுக்கு ஒரு தடையாகவே இருக்கும்.
காலத்துக்கும் அவர்கள் மீது வைக்கப்படும் அந்த கருப்புப் புள்ளி மறையாது என, புக்கிட் அமான் குற்றப்புலாய்வுத் துறை இயக்குனர் எச்சரித்தார்.
-------
சாலை போக்குவரத்துத் துறையின் MYJPJ தளத்தின் வழி, இணைய பரிவர்த்தனைகள் மூலம் ஒரே மாதத்தில் இரண்டு கோடியே என்பது லட்சம் ரிங்கிட் வசூலிக்கப்பட்டுள்ளது!
புதிய, இணையம் வழியிலான கட்டண முறை அமுலுக்கு வந்திருப்பது, பொதுமக்களிடையேவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதாக JPJ தலைமை இயக்குனர் தெரிவித்தார்.
கடந்த February மாதம் அறிமுகம் கண்ட MyJPJ செயலியை இதுவரை ஒரு கோடியே 27 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அவர் சொன்னார்.
---------
மலாக்கா, Alor Gajahவில் ஆசிரியை ஒருவரைக் கொடூரமான முறையில் கொன்ற சந்தேகத்தின் பேரில் கைதான நபர் மீது, திங்கட்கிழமை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதன் தொடர்பான விசாரணை அறிக்கையைக் காவல் துறை மாநில சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பித்துள்ளயது/
---------
வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் தனது மனைவியை பள்ளத்தாக்கில் தள்ளிவிட்டதாக நம்பப்படும் ஆடவர் மீது நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படும்!
கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய இரு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்படவிருப்பதாக பேராக் காவல் துறை தலைவர் தெரிவித்தார்.
காரில் சென்று கொண்டிருக்கும் போது அத்தம்பதிக்கிடையில் வாக்குவாதும் முற்றியதில், சம்பந்தப்பட்ட நபர் தனது மனைவியை காரை விட்டு வெளியே தள்ளியதாகக் கூறப்படுகிறது.
----------
மலாக்காவில் சட்டவிரோதமான முறையில் பல் கிளினிக் நடத்தி வந்த பெண்ணுக்கு அறுபதாயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது!
-------
2021ஆம் ஆண்டு தாலிபான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து இதுவரை, Afghanistan-நில் பதினான்கு லட்சம் பெண்களுக்கு இடைநிலை கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.
ஆரம்பக் கல்வி வாய்ப்புமே வெகுவாகக் குறைந்து, 11 லட்சம் குறைவான ஆண்களும் பெண்களுமே பள்ளிக்குச் சென்றிருப்பதாக, ஐநாவின் கல்வி, அறிவியல், கலாச்சார அமைப்பான UNESCO தகவல் வெளியிட்டுள்ளது..
மொத்தமாக அந்நாட்டில் கிட்டத்தட்ட 25 லட்சம் பெண்கள் கல்வி உரிமையை இழந்துள்ளனர்.
பெண்களுக்கு இடைநிலை மற்றும் பல்கலைக்கழக கல்வி வாய்ப்புக்குத் தடை விதித்துள்ள ஒரே உலக நாடு Afghanistan என்பது குறிப்பிடத்தக்கது.
ஆப்பிரிக்காவில் அமுலில் இருந்த நிறவெறி கொள்கையைப் போல, இது ஒரு பாலின வெறி கொள்கையாக இருக்கிறது என, ஐநா இதனைக் கடுமையாகச் சாடியிருக்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather