← Back to list
சிறைக்குள் போதைப்பொருள் கடத்தல்!
Aug 13, 2024
பேராக், தாப்பாவில், Drone மூலம் சிறைக்குள் போதைப்பொருள் கடத்த முயன்ற சம்பவம் தொடர்பில், ஐந்து Tapah சிறை அதிகாரிகள் காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதன் தொடர்பான விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், வாக்குமூலம் அளிக்க மேலும் சில அதிகாரிகளும் கைதிகளும் அழைக்கப்படுவர் என்றும் மாநில காவல்துறை தெரிவித்தது.
போதைப்பொருளைக் கொண்டு வந்த Drone, சிறையின் கூரையை மோதி உடைந்ததைத் தொடர்ந்து, அந்த திருட்டு செயல் அம்பலமானது.
--------
சபா Lahad Datu-வில் உள்ள தொழிற்பயிற்சிக் கல்லூரியில், சக மாணவர் ஒருவரை கொலை செய்ததாக 13 இளைஞர்கள் மீது இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டை மறுத்தனர்.
மார்ச் மாதம், பாதிக்கப்பட்ட அந்த 17 வயது இளைஞன், உடலில் பல காயங்களுடன், அவரின் கல்லூரி தங்கும் அறையில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.
--------
சிலாங்கூர், Petaling Jaya-வில் உள்ள சூராவ் ஒன்றில், இரு பெண்களைக் கத்தியால் தாக்கியதாகக் கூறப்படும் ஓர் ஆடவர், இன்று முதல் ஒரு வாரத்திற்கு தடுத்து வைக்கப்படுவர்.
46 வயதான அந்த உள்ளூர் ஆடவரின் நண்பரையும் தடுத்து வைத்து விசாரிக்க காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
---------
நாடு முழுவதும் நேற்று மட்டும் 1,800-க்கும் மேற்பட்ட சாலை விபத்துகள் பதிவு செய்யப்பட்டன.
அதில் 13 மரணங்கள் பதிவானதாக, அரச மலேசிய காவல்படையின் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்க துறை தெரிவித்துள்ளது.
---------
Johor Mahkota இடைத்தேர்தல் 28-ஆம் தேதி செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது.
அவ்விடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 14-ஆம் தேதி நடைபெறும் வேளை, செப்டம்பர் 24-ஆம் தேதி முன்கூட்டியே வாகளிப்பு நடைபெறவிருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather