← Back to list
விளையாட்டாளர்களைக் குறைக்கூறாதீர்!
Aug 12, 2024

 
தேசிய விளையாட்டு வீரர்களின் செயல்திறனை மேம்படுத்த, புதிய கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கும் !  
நடந்து முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்கில், பூப்பந்து போட்டியின் மூலம் நாடு, இரண்டு வெண்கலப் பதக்கங்கள் பெற்றதைத் தொடர்ந்து, பிரதமர் Datuk Seri Anwar Ibrahim அவ்வாறு கூறியுள்ளார். 
கிடைக்கப்பெற்ற முடிவுகளைப் பற்றி மக்கள் குறை கூறக்கூடாது எனக் கூறிய அவர், தேசிய விளையாட்டாளர்களின் தியாகத்தையும், அவர்களின் கடின உழைப்பையும் கருத்திற் கொள்ள வேண்டும் என்றார். 
-------------  
Liverpool-லின் Trent Alexander-Arnold, தனது எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கியுள்ளார். 
அடுத்த பருவத்தோடு Arnold-டின் ஒப்பந்தம் முடிவடையவிருக்கும் நிலையில், The Reds அவரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க உள்ளதாம். 
என்றாலும், அந்த மத்திய திடலாட்டக்காரரை, வலைத்துப்போட Real Madrid உள்ளிட்ட சில அணிகள் காத்திருக்கின்றன.
---------   
ஒப்பந்த நீட்டிப்பு குறித்து பேச்சு வார்த்தை எழவில்லையென்றால், அணியிலிருந்து தாம் வெளியேறவிருப்பதாக Liverpool கேப்டன் Virgil van Dijk சொல்லியிருக்கிறார். 
தாம் அணியில் மகிழ்ச்சியாக தான் இருப்பதாக முன்னதாக கூறியிருந்த van Dijk, தற்போது தன்னுடைய ஒப்பந்த நீட்டிப்பில் எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை என்றார். 
அவரின் ஒப்பந்தம் அடுத்தாண்டோடு காலாவதியாகிறது.
------------  
Atlético Madrid-டின் Samu Omorodion-னை ஒப்பந்தம் செய்யும் Chelsea-யின் கனவு நீரானது. 
சில காரணங்களால் Chelsea அவரை ஒப்பந்தம் செய்ய முடியாமல் போனது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மாறாக,  Joao Felix-சை அணிக்குக் கொண்டு வரும் முயற்சியில் The Blues இறங்கியுள்ளதாம்.
------------  
Athletic கிளப்பின் நட்சத்திரம் Nico Williams, Barcelona-வில் சேர அதிக ஆர்வம் கொண்டுள்ளாராம். 
எவ்வளவு விரைவில், தன்னை Barca அணுகுகிறதோ, அந்த கணமே தாம் அக்கிளப்புக்கு மாறிச் செல்ல தயார் என Williams சொன்னார். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather