← Back to list
அரையிறுதிக்கு முன்னேறிய Lee Zii Jia!
Aug 03, 2024

 
பேரிஸ் ஒலிம்பிக் போட்டியில் தேசிய ஆடவர் பூப்பந்து ஒற்றையர் Lee Zii Jia, அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.  
இன்று அதிகாலை நடந்த காலிறுதியில், Zii Jia உலகின் மூன்றாம் நிலை ஆட்டக்காரரை நேரடி செட்களில் வீழ்த்தினார். 
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தாம் இன்னும் உடைக்கவில்லையெனவும், இன்னும் அடுத்தடுத்த ஆட்டங்களுக்கு, அனைவரும் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுமெனவும், ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசியபோது Zii Jia அவ்வாறு கூறினார்.  
--------  
அப்போட்டியில், தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையர் Pearly Tan / M Thinaah, வெண்கலப் பதக்கத்தை வெல்லும் இலக்கோடு ஜப்பானிய  ஜோடியுடன் இன்றிரவு களம் காண்கின்றனர்.   
அதற்கு இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர், தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார். 
நேற்று நடந்த அரையிறுதியில் அவர்கள் உலகின் முதல் நிலை ஆட்டக்காரர்களான சீன ஜோடியிடம் 3 செட்களில் தோல்வியடைந்தனர்.   
---------   
இதனிடையே, அப்போட்டியில் தேசிய ஆடவர் இரட்டையர்  Aaron Chia/ Soh Wooi Yik, வெண்கலப் பதக்க வெற்றியாளரை நிர்ணயிக்கும் ஆட்டத்தில் களமிறங்குகின்றனர். 
அவ்விருவரும் நேற்று அரையிறுதியில், சீன ஜோடியிடம் மூன்று செட்களில் தோற்றனர்.  
எனவே, Aaron-னும் Wooi Yik-கும் நாளை அவ்வாட்டத்தில் டென்மார்க் வீரர்களைச் சந்திக்கின்றனர்.    
---------   
அதே போட்டியில், தேசிய மின்னல்வேக ஓட்டக்காரர் Muhd Azeem Fahmi மற்றும் படகோட்டும் பிரிவில் Nur Shazrin Latiff-பும் Khairulnizam Afendy-யும் தங்கப் பதக்கத்தை வெல்லும் இலக்கோடு இன்று களமிறங்குகின்றனர். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather