← Back to list
PAS, BN இடையே இரு முனை போட்டி!
Aug 03, 2024
Kelantan Nenggiri இடைத்தேர்தலில் பாஸ், பரிசான் நேஷ்னலுக்கிடையே இரு முனை போட்டி நிலவுகிறது!
இன்று காலை வேட்புமனுத்தாக்கல் சுமுகமாக நடைபெற்று முடிந்ததாக, தேர்தல் நிர்வாக அதிகாரி Nik Raisnan Daud தெரிவித்துள்ளார்.
நெங்கிரி சட்டமன்ற உறுப்பினர் பெர்சாத்து கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, அத்தொகுதியியில் இம்மாதம் 17-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
-----------
வங்காளதேசத்தில் நிகழ்ந்து வரும் கலவரத்தின் நிலைமையை, வெளியுறவு அமைச்சு தொடர்ந்து கண்காணித்து வருகிறது.
அக்கலவரத்தைக் கருத்தில் கொண்டு, மலேசியர்கள் அந்நாட்டிற்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தற்காலிகமாக ஒத்திவைக்க ஊக்குவிக்கப்படுகின்றனர்.
அதே சமயம் அந்நாட்டிற்கு திரும்ப விரும்பும் மலேசிய மாணவர்கள், அங்கு சென்றவுடன் தங்களை டாக்காவில் உள்ள மலேசிய உயர் ஆணையத்திடம் பதிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
----------
UPU-வில் மேல்முறையீடு செய்த SPM முடித்த மாணவர்கள், தங்களின் முடிவுகளை, அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை சரி பார்த்துக்கொள்ளலாம்.
முடிவுகளில் தோல்வி கண்டவர்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் அல்லது TVET தொழிற்பயிற்சி கல்லூரிக்கு விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
----------
B1 மற்றும் B2 மோட்டார் சைக்கிள் உரிமம் வைத்திருப்பவர்கள் தங்களின் உரிமத்தை அக்டோபர் தொடங்கி முழு B-க்கு மேம்படுத்திக் கொள்ளும் புதிய திட்டம் அமுலுக்கு வரவிருக்கிறது!
அதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள், குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் B1 அல்லது B2 உரிமம் வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் உள்ளன.
அத்திட்டம் அக்டோபர் ஒன்றாம் தேதி அமுலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் Anthony Loke தெரிவித்தார்.
----------
கோலாலம்பூர், இவ்வாண்டின் முதல் பாதியில் ஐந்தாவது மிகவும் பிரபலமான அனைத்துலக இடமாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
முதல் நான்கு இடங்களில், Tokyo, Bangkok, Osaka, Seoul ஆகிய இடங்கள் உள்ளன.
---------
Selangor-ரில் கிட்டத்தட்ட 18,800 பேரிடம் வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாதது தெரிய வந்துள்ளதாக, மாநில சாலை போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather