← Back to list
பிரதமரின் பதிவுகள் அகற்றப்பட்டதா!
Aug 01, 2024
Hamas அரசியல் தலைவர் Ismail Haniyeh படுகொலை செய்யப்பட்டது தொடர்பில், பிரதமர் சமூக ஊடகத்தில் பதிவிட்ட பதிவுகள் நீக்கப்பட்டுள்ளது.
தொடர்புத்துறை அமைச்சு, Meta-விடம் அப்பதிவுகளை நீக்கியதற்கான விளக்கத்தை கேட்கிறது.
அந்த பதிவுகள் தானாகவே நீக்கப்பட்டதா அல்லது குறிப்பிட்ட சில புகாரினால் நீக்கப்பட்டதா என்பது குறித்து தமக்கு விளக்கம் தேவையென Fahmi Fadzil தெரிவித்தார்.
அப்பதிவுகள் நீக்கப்பட்டது, தமக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
---------
போலி கல்விச் சான்றிதழ்கள் விற்கப்பட்டதாக கூறப்படும் புகார் குறித்து, கல்வி அமைச்சு காவல்துறையிடம் புகாரளிக்கும்.
ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரையிலான இந்த போலி சான்றிதழ்கள், இணையத்தில் நான்காயிரம் ரிங்கிட் வரை விற்கப்பட்டு வந்ததாக, முன்னதாக செய்திகள் வெளிவந்தன.
அவ்வாறு செய்பவர்களுக்கு எதிராக, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்கல்வி அமைச்சு தெரிவித்தது.
தமது தரப்பு சரியான விஷயத்தையே செய்து வருவதில் தாம் உறுதியாக இருப்பதாக அதன் அமைச்சர் கூறினார்.
-------
பேராக் கெரிக்கில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில், தனது மனைவியைக் கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் ஒருவரை காவல்துறை கைது செய்துள்ளது.
அத்தம்பதிக்கிடையே காரில் தகராறு நிகழ்ந்து கொண்டிருந்த நிலையில், கைதான அவ்வாடவர் தனது மனைவியை ஒரு பள்ளத்தில் தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது.
---------
இந்தியா கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவினால் மாண்டவர்களின் எண்ணிக்கை 287-ஆக உயர்ந்துள்ளது.
அங்கு இன்னும் 460 பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அச்சம்பவத்தில் புதையுண்டவர்களை தேடும் பணிகள் தொடருகின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather