← Back to list
14 வயது காரோட்டி விவகாரம்!
சிலாங்கூர், செப்பாங்கில் வயது குறைந்த சிறுவன் காரோட்டிய சம்பவம் தொடர்பில் காவல் துறை விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளது!
2001 சிறார் சட்டத்தின் கீழ் அது விசாரிக்கப்படுவதாக செப்பாங் மாவட்ட காவல் துறை தலைவர் தெரிவித்துள்ளார்.
ஏறக்குறைய 13 வயதுடைய அச்சிறுவன் தனது இரு தம்பிகளை சுயமாகக் காரில் ஏற்றிச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது.
அதனைத் தொடர்ந்து அச்சிறுவனின் பெற்றோரை அடையாளம் கண்ட காவல் துறை அவர்களை விசாரணைக்கு உட்படுத்தியது.
--------
நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் ஈராயிரத்து ஐநூரு திறந்த வெளி எறிப்பு நடவடிக்கைகள் பதிவாகியிருக்கின்றன.
இந்த மாதம் மட்டும் ஆயிரத்து முன்னூருக்கும் அதிகமான சம்பவங்கள் பதிவானதாக தீயணைப்பு மீட்புத் துறை தெரிவித்துள்ளது.
இது கடந்த மாதத்தை விட தொன்னூரு விழுக்காடு அதிகம்.
நடப்பு வெப்ப காலத்தால் வறட்சி அதிகமாவதே தீ எளிதில் பர காரணம் என அத்துறை மேலும் சொன்னது.
--------
E hailing நிறுவனங்கள் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களை சரிவர பின்பற்றுமாறு நினைவூட்டப்படுகின்றன!
அப்படி செய்யத் தவறும் நிறுவனங்களின் பெர்மிட், தரை பொது போக்குவரத்து அமைப்பால் ரத்து செய்யப்படும் என, போக்குவரத்து அமைச்சு எச்சரித்துள்ளது.
விதிமுறைகளில் இல்லாத விலையை ஏலம் விடும் முறை குறித்து புகார்கள் எழுந்து வருவதை அடுத்து, அவ்வமைச்சு அவ்வாறு கூறியது.
---------
ஜொகூர் பாருவில், காதல் மோசடியில் சிக்கிய முப்பது வயது மதிக்கத்தக்க விமானி ஒருவர் ஆறரை லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்.
சமூக ஊடகத்தில் அறிமுகமான நபரை நம்பி அவர் அப்பணத்தை இழந்துள்ளார்.
--------
இந்தியா, கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி மாண்டவர்களின் எண்ணிக்கை நூற்று ஐம்பதாக உயர்ந்துள்ளது!
தொடர் மழையை அடுத்து ஏற்பட்ட காட்டாற்று வெள்ளத்தால் அங்கு வசிக்கும் நூற்றுக் கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் தொடருகின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather