← Back to list
இன்னொரு ஜோடி காலிறுதியில் !
Jul 30, 2024
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில், தேசிய பூப்பந்து மகளிர் இரட்டையர் Pearly Tan/M. Thinaah காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சற்று முன்பு நடந்த கடைசி குழு நிலை ஆட்டத்தில், அவ்விருவரும் இந்தோனேசிய ஜோடியை, நேர் செட்களில் வீழ்த்தி வெற்றிப் பெற்றனர்.
Pearly, Thinaah-வுக்கு எதிராக விளையாடிய அந்த இந்தோனேசிய மகளிர் இரட்டையரில் ஒருவர், கடந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இன்று மாலை மணி 6.40-க்கு, மகளிர் ஒற்றையர் அம்பெய்தும் பிரிவில் Syaqiera Mashayikh போட்டியிடுகிறார்.
பேரிஸ் ஒலிம்பிக்கின் அண்மைய செய்திகளையும் நேரடி ஒளிபரப்பையும், Astro-வில் காணலாம்.
-------
இவ்வேளையில், அப்போட்டியின் காலிறுதி ஆட்டத்தில், நாளை நாட்டின் பூப்பந்து கலப்பு இரட்டையரான Chen Tang Jie- Toh Ee Wei, தென் கொரிய ஜோடியைச் சந்திக்க அட்டவணையிடப்பட்டுள்ளனர்!
நாளைய ஆட்டம் அவ்விருவருக்கும் சாதகமாக அமையலாம் என நம்பப்படுகிறது.
ஏனெனில், இதற்கு முன்பு இரண்டு ஆட்டங்களில் அக்கலப்பு இரட்டையர், கொரிய ஜோடியிடம் வெற்றிப் பெற்றிருக்கின்றனர்.
---------
Julian Alvarez, Manchester City-லிருந்து வெளியேறலாம்.
அணியில் அவரின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், City-யில் தொடர்ந்து நீடிக்கப்போவதா இல்லையா என்பது குறித்து, Olympic போட்டி முடிந்தவுடன் தாம் முடிவெடுக்கவுள்ளதாக Alvarez கூறினார்.
Man City-யுடன் புதிய நான்காண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட Alvarez மறுத்திவிட்டாராம்.
Erling Haaland-டின் வருகையால் City-யில் Alvarez-சின் முக்கியத்துவம் குறைந்திருப்பதே அவரின் அம்முடிவுக்குக் காரணமெனக் கூறப்படுகிறது.
---------
Joshua Kimmich-சை அணிக்குக் கொண்டு வர PSG, Bayern Munich-குடன் பேச்சு நடத்தியுள்ளது.
Kimmich-சை வீற்கும் விலைக்கும், அவர் எதிர்பார்க்கும் சம்பளத்துக்கும் PSG இணக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
Bayern Munich-குடனான Kimmich-சின் ஒப்பந்தம் இன்னும் ஓராண்டே எஞ்சியிருக்கும் நிலையில், PSG அவரை எடுத்துக்கொள்ள ஆர்வம் கொள்கிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather