← Back to list
வேகக் கட்டுப்பாடு பிரச்னை உயர்வு!
Apr 08, 2024

நோன்பு பெருநாளை ஒட்டி இம்மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய HRA சிறப்புச் சோதனை நடவடிக்கையில், வேகக் கட்டுப்பாட்டை மீறியது தொடர்பில் 16 ஆயிரத்துக்கு நூற்று 40 சம்பவங்கள் இதுவரை பதிவாகின. 
அவை அனைத்தும் தானியங்கி வேகக் கண்காணிப்பு கேமராவில் பதிவானவை என, சாலை போக்குவரத்துத் துறையின் அமுலாக்கப் பிரிவு மூத்த அதிகாரி கூறினார். 
இதையடுத்து ஓட்டுனர்கள் சற்று பொறுப்புடன் நடந்துக் கொள்ளும்படியும், வேகக் கட்டுப்பாட்டை மீற வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 
-------- 
நோன்பு பெருநாள் விடுமுறையை முன்னிட்டு, சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட 15 விழுக்காடு உயரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது! 
உச்ச நேரங்களில் 21 லட்சம் வாகனங்களை எதிர்ப்பார்க்கலாம் என PLUS நிறுவ்சனம் தெரிவித்துள்ளது. 
இதையடுத்து நாடு முழுவதும் போக்குவரத்து சுமூகமாக இருப்பதை உறுதிச் செய்ய, தனது பராமரிப்பின் கீழ் உள்ள நெடுஞ்சாலைகளில் 18 Smartlane பதைகளை அந்நிறுவனம் திறக்கவுள்ளது. 
-------- 
தலைநகரில் ஆறு துப்பாக்கிகளுடன் கைதான Israel-லிய ஆடவரின் தடுப்பு காவல் மேலும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்படுகிறது! 
அவ்வாடவரின் நோக்கம் குறித்த விசாரணையை முழுமைப்படுத்த இன்னும் அவகாசம் தேவை என, தேசிய காவல் படை தலைவர் தெரிவித்தார். 
இதற்கு முன் அவ்வாடவனுக்கு அந்த துப்பாக்கிகளைக் கொடுத்ததாக நம்பப்படும் உள்ளூர் தம்பதி ஒன்றின் தடுப்புக் காவலும் நீட்டிக்கப்பட்டது. 
-------- 
இன்று காலை ஐந்து மணி வரையிலான நிலவரப்படி நாட்டின் இரு இடங்களில் காற்றுத்தூய்மைக்கேட்டுக் குறியீடு ஆரோக்கியமற்ற அளவில் பதிவாகியிருக்கிறது! 
நெகிரி செம்பிலானில், Nilai மற்றும் செரம்பான்ோ ஆகியவை அதிலடங்கும். 
--------
கெடா, Alor Setarரில் பணியின் போது TikTok செயலியில் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்த பேருந்து ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது! 
பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இம்மாதிரியான செயல்களை பேருந்து ஓட்டுனர்கள் செய்வதைக் கண்டால், அதன் தொடர்பில் உடனடியாகப் புகாரளிக்கும்படி, JPJ பொதுமக்களை வலியுறுத்தியது. 
-------  
சிலாங்கூர், Kota Damansara-வில் பொது கழிப்பறையில் மாணவி ஒருத்தியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக நம்பப்படும் ஆசிரியர் கைது! 
அந்த 14 வயது மாணவி கொடுத்த புகாரை அடுத்து கைதான சந்தேக நபர், விசாரணைக்காக ஐந்து நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather