← Back to list
30-க்கும் மேற்பட்ட பகுதிகள் முதல் நிலை வெப்ப எச்சரிக்கை!
Mar 29, 2024
நாடு முழுவதும் 30-க்கும் மேற்பட்ட பகுதிகள் முதல் நிலை வெப்ப அலையில் இருப்பதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டிலுள்ள பதினாறு மாவட்டங்களில் 15 நாட்களுக்கு மேல் மழை பெய்யவில்லை என இயற்கை வளங்கள், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சு கூறியுள்ளது.
கெடா Langkawi-யில் 22 நாட்கள், Negeri Sembilan Jelebu மற்றும் Port Dickson-னில் 17 நாட்களுக்கு மழை பெய்யவில்லை என அவ்வமைச்சு சொன்னது.
-------
நோன்பு பெருநாளுக்கு கூடுதல் பொது விடுமுறையை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என Cuepacs தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு ஏற்கனவே நிறைய பொது விடுமுறைகள் இருப்பதாகவும், அவர்களுக்கு கூடுதல் விடுமுறை தேவைப்பட்டால், வருடாந்திர விடுமுறையைப் பயன்படுத்தலாம் என அரசு ஊழியர்களின் தொழிற்சங்க Congress கூறியது.
-----
இவ்வேளையில், நோன்பு பெருநாளுக்கு வழங்கப்பட்ட இரண்டு நாட்கள் Tol விலக்கு, நீட்டிக்கப்படாது என பொதுப்பணித்துறை அமைச்சு உறுத்திப்படுத்தியுள்ளது.
வரும் ஏப்ரல் 8 மற்றும் 9-ஆம் தேதி என இரு நாட்களுக்கு TOL விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
-------
ஜனவரி முதல் மார்ச் 25 வரை நாட்டில் கிட்டத்தட்ட 1,600 திறந்தவெளி எரிப்பு சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள வேளை சிலாங்கூரில் மிக அதிகமாக 323 சம்பவங்கள் நிகழ்ந்திருப்பதாக சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Nik Nazmi Nik Ahmad தெரிவித்துள்ளார். .
--------
நாடு முழுவதும் நேற்று 1,810 சாலை விபத்துகள் பதிவாகிய வேளை, 11 உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டதாக Bukit Aman போக்குவரத்து காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather