Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

கைதிகளுக்கான வீட்டுக் காவல் உத்தேசத் திட்டம்!

Mar 22, 2024


கைதிகளுக்கான வீட்டுக் காவல் உத்தேசத் திட்டம்!

அரசாங்கத்தின், கைதிகளுக்கான வீட்டுக் காவல் உத்தேசத் திட்டம், நெரிசல் மிகுந்த சிறைச்சாலைகள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைச், சமாளிக்க உதவும் என குற்றவியல் நிபுணர் Dr Haezreena Begum Abdul Hamid தெரிவித்துள்ளார்.  

சிறைச்சாலைகளில் எழுபதாயிரம் கைதிகள் இருக்கும் வேளை, அவற்றில் 62 ஆயிரம் கைதிகளை மட்டுமே கையாள முடிவதாக அந்நிபுணர் கூறினார்.  

கைதிகள், வேறு கைதிகளுடன் அறையை பகிர்ந்துக்கொள்ள வேண்டியுள்ளதால், அவர்களுக்கு அதுவொரு சவாலாக இருப்பதாக அவர் மேலும் சொன்னார்.  

அப்படியே அந்த உத்தேசத் திட்டம் அமுலுக்கு வந்தாலும், 4 ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறைதண்டனையை அனுபவிக்கும் கைதிகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்குத்தான் வழங்கப்படும் என அத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

----------   

சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குறிப்பாக பருவ நிலை மாற்றங்கள் குறித்த கவலைகளை அனைவரும் பகிர்ந்து கொள்ளுமாறு மலேசிய வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது. 

பருவ நிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்வதற்காக, அம்மையம் வானிலை நிலவரங்களை அவ்வப்போது புதுப்பித்து வருவதாக, Terengganu Met Malaysia இயக்குநர் Rosli Zakaria தெரிவித்துள்ளார்.  

நாளை அனுசரிக்கப்படும் உலக வானிலை தினத்தை முன்னிட்டு அவர் அவ்வாறு சொன்னார்.  

---------

Selangor-ரில் உள்ள அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் எட்டாம் தேதி நோன்பு பெருநாள் சிறப்பு உதவி தொகையாக, ஒரு மாத சம்பளம் அல்லது குறைந்தபட்சம் ஆயிரம் ரிங்கிட் நிதியை மாநில அரசாங்கம் வழங்கவுள்ளது.   

-------

நாடு முழுவதும் நேற்று வரை 1,800 சாலை விபத்துகள் பதிவாகியுள்ளதாக புக்கிட் அமான் போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது. 

------- 

கோலாலம்பூரில், கார் இழுக்கும் முகவருடன் அதிருப்தி அடைந்த 60 வயது முதியவர் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கியை மாவட்ட காவல் துறை பறிமுதல் செய்துள்ளனர்.  

அதன் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் பரவி வருகிறது


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather