← Back to list
ஆடம்பர பொருட்களுக்கான வரி!
Mar 01, 2024

 
ஆடம்பர பொருட்களுக்கான வரியின் மூலம் அரசாங்கம் ஆண்டொன்றுக்கு எழுபது கோடி ரிங்கிட் ஈட்ட முடியும்! 
அதன் தொடர்பான சட்டம் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என பிரதமர் கூறியிருக்கிறார். 
அந்த வரி 5லிருந்து பத்து விழுக்காடு வரை நிர்ணயிக்கப்படலாம் என, நிதியமைச்சருமான Datuk Seri Anwar Ibrahim மக்களவையில் தெரிவித்தார். 
குறிப்பிட்ட விலையைத் தாண்டும், நகைகள் உள்ளிட்ட ஆடம்பர பொருட்களுக்கான இந்த வரி 2024 வரவு செலவு அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்டது. 
--------  
சேவை தரத்தை உயர்த்தும் முயற்சியாக ETS மற்றும் Komuter ரயில்களை KTMB நிறுவனம் தரமுயர்த்தவிருக்கிறது! 
மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் அடுத்த சில மாதங்களில் வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்திருக்கின்றது. 
-------  
சிலாங்கூரில் பதட்டமடைந்ததால் தான் மாது ஒருவர் தனது காரால் மூன்று வாகனங்களை மோதித்தள்ளியதாக காவல் துறை கூறியிருக்கிறது! 
அம்மாதுவின் கார் கட்டுப்பாட்டை இழந்து மற்ற வாகனங்களை மோதும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் பரவியது. 
------  
முன்னாள் நிதியமைச்சர் Tun Daim Zainuddin இன்னும் விசாரணையில் இருப்பதாக மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையம் தெரிவித்துள்ளது! 
அவரது ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், வெளிநாட்டில் இருப்பவர்கள் உட்பட இன்னும் சிலரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டியிருப்பதாக MACC சொன்னது. 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather