← Back to list
SST, பொருட்களின் விலையை உயர்த்தாது!
Feb 29, 2024
விற்பனை சேவை வரி SST-யின் உயர்வு பொருட்களின் விலையை அதிரடியாக உயர்த்தாது என அரசாங்கம் உத்தரவாதம் அளித்திருக்கிறது!
அந்த இரண்டு விழுக்காடு உயர்வானது குறிப்பிட்ட வணிகச் சேவைகளில் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்தும்.
உணவு, பானம், பல்லூடகம் உட்பட, அடித்தட்டு மக்களின் அன்றாட வாழ்க்கை முறை சார்ந்த சேவைகளுக்கு விலக்கு உண்டு என பொருளாதார அமைச்சு தெரிவித்தது.
நடப்பிலுள்ள ஆறு விழுக்காடு SST வரி, நாளை தொடங்கி எட்டு விழுக்காடாக உயர்த்தப்படுகிறது.
--------
மற்றொரு நிலவரத்தில் தண்ணீர் கட்டணத்துக்கு SST விதிக்கப்படாது என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை!
என்றாலும் அறுநூரு கிலோ watt-டுக்கு மேற்பட்ட மின்சாரக் கட்டணங்களுக்கு 8% SST உண்டு என, நிதியனைச்சர் கூறினார்.
என்பது விழுக்காட்டு வீடுகள் இந்த விகிதத்திற்கும் குறைவான மின்சாரமே பயன்படுத்துவர் என்பதால், இது பொதுமக்களை பெரியளவில் பாதிக்காது என அவர் சொன்னார்.
---------
2022ஆம் ஆண்டில் ஏறக்குறைய ஆயிரத்து எழுநூரு மருத்துவ அதிகாரிகள் அரசாங்கத் துறையிலிருந்து பணி விலகியிருக்கின்றனர்!
அவர்களில் சம்பள உயர்வுக்காகப் பாதி பேர் தனியார் துறையில் சேர்ந்த நிலையில், சிலர் மேற்படிப்பை தொடரவும், இன்னும் சிலர் சொந்த கிளினிக் திறப்பது, சுய காரணங்கள் உள்ளிட்டவற்றுக்காக விலகியதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.
----------
2024/2025ஆம் கல்வித் தவணைக்கான UPUOnline விண்ணப்பம் இன்று தொடங்குகிறது!
முதல் கட்ட விண்ணப்பம் இன்று தொடங்கி அடுத்த மாதம் 29ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட விண்ணப்பம் 29 ஏப்ரல் தொடங்கி ஜூன் ஒன்பது வரையிலும் திறக்கப்படுகிறது.
SPM, STPM முடித்த மாணவர்கள் UPUOnline வழி, Foundation, சான்றிதழ், டிப்லோமா, இளங்கலை பட்டப்படிப்புகளில் சேற விண்ணப்பிக்கலாம்.
-----------
கடந்த வாரம் வரையிலான நிலவரப்படி முப்பத்தாரு லட்சம் மலேசியர்கள் அரசாங்கத்தின் முதன்மை தரவுத் தளம் PADU-வில் பதிந்துக் கொண்டுள்ளனர்.
அவர்களில் கிட்டத்தட்ட பதினேழு லட்சம் பேர் தங்களின் சுய விவரங்களைப் புதுப்பித்துக் கொண்டுள்ளதாக பொருளாதார அமைச்சர் தெரிவித்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather