← Back to list
இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை!
Feb 27, 2024
இவ்வாண்டு இந்திய சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த மலேசியா இலக்கு கொண்டுள்ளது!
அதற்கான ஆக்ககர முயற்சிகளில் தமது தரப்பு ஈடுபட்டு வருவதாக Tourism Malaysia தெரிவித்திருக்கிறது.
மலேசியாவின் பிரதிநிதிகள் குழு சென்னை, கொல்கத்தா மற்றும் Ahmedabad பயண முகவர்களுடன் வணிக் திட்டங்கள் சிலவற்றையும் மேற்கொண்டு வருவதாக அது சொன்னது.
-------
நிலையான 5G இணையச் சேவையைக் கொண்டுள்ள உலக நாடுகள் பட்டியலில், முதலிடம் வகிக்கிறது மலேசியா!
பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகத்தின் அடிப்படையில், மலேசியாவின் நிலைத்தன்மை 97 விழுக்காட்டைத் தாண்டியிருப்பதாக, பிணைய நுண்ணறிவு மற்றும் இணைப்பு நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
Barcelona-வில் நடைபெற்ற Mobile World மாநாட்டில் தொடர்புத் துறை அமைச்சர் Fahmi Fadzil அத்தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.
-------
KL, Cherasசில் 93 வங்காளதேச ஊழியர்களுக்கு வேலை கொடுக்காமல் கைவிட்ட நிறுவனம் ஒன்று கருப்புப் பட்டியலிடப்பட்டுள்ளது!
இனி வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு விண்ணப்பிக்க அந்நிறுவனத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதாக உள்துறை அமைச்சர் Datuk Seri Saifuddin Nasution Ismail கூறினார்.
-------
இடைநிலை பள்ளிகளுக்கான மாற்று மதிப்பீட்டு முறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் தமது தரப்பு ஈடுபடும் என கல்வி அமைச்சு உறுதியளித்துள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் உயர் தர கல்வி சென்று சேறுவதை உறுதிச் செய்வதே அதன் நோக்கம்.
-------
அரசாங்கத்தின் முதன்மை தரவுத்தளம் PADU-வில் இதுவரை முப்பத்து எட்டு லட்சம் பேர் தங்களின் சுய விவரங்களைப் புதுப்பித்துக் கொண்டுள்ளனர்.
--------
கடந்த பதிமூன்று ஆண்டுகளாக ஜொகூரில் தங்கியிருந்த ஆவணம் இல்லாத சிங்கப்பூரிய ஆடவர் குடிநுழைவுத்துறையிடம் பிடிப்பட்டார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather