← Back to list
அனுமதியின்றி உள்ளடக்க பயன்பாடு!
Feb 23, 2024

 
அனுமதி இன்றி உள்ளடக்கங்கள் பயன்படுத்தப்படும் செய்தி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் உள்ளடக்க படைப்பாளிகள் புகார் கொடுக்க ஏதுவாக, பிரத்தியேக முறை ஒன்றை உருவாக்க அரசாங்கம் திட்டமிடுகிறது! 
அண்மைய காலமாக ஒரு உள்ளடக்கம் மற்ற செய்தி நிறுவனங்களால் திருடப்பட்டு, அது பார்வையாளர்களிடம் தவறான தகவலைக் கொண்டுச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்திருப்பதைச் சுட்டிக் காட்டி, தொடர்புத்துறை அமைச்சர் Fahmid Fadzil அவ்வாறு சொன்னார். 
அப்புதிய முறையின் கீழ் உள்ளடக்கங்கள் திருடப்படும் போது, அதன் உரிமையாளர்கள் மலேசிய ஊழல் ஒழிப்பு ஆணையத்திடம் புகாரளிக்கலாம் என, அவர் சொன்னார். 
செய்தி உள்ளடக்கங்களை அப்படியே திருடுவது பத்திரிகை நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்ல, பிற சிக்கல்களுக்கும் வழிவகுக்கும் என்று Fahmi Fadzil அறிவுறுத்தினார். 
------  
இதனிடையே நாடு முழுவதும் ஐந்து G இணையச் சேவையைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை முப்பது விழுக்காடாக உள்ளது. 
இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமான சந்தாதாரர்களை இந்த 5G சேவை கொண்டிருப்பதாக Fahmi Fadzil குறிப்பிட்டார். 
------  
நாட்டில் கடந்த ஐந்தாண்டுகளில் பதினான்காயிரத்துக்கும் அதிகமான முதலீட்டு மோசடிகள் பதிவாகியிருக்கின்றன. 
அவற்றின் வழி நூற்று முப்பது கோடி ரிங்கிட் நட்டம் ஏற்பட்டுள்ளதாக Bukit Aman தெரிவித்தது. 
------  
தங்களின் மக்கள் வீட்டுத் திட்டம் அல்லது PPR குடியிருப்புகளை வெளிநாட்டவர்களுக்கு வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கண்டறியப்பட்டால், அவர்களது ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என KL மாநகர் மன்றம் எச்சரித்துள்ளது. 
------  
Grade 56 மற்றும் அதற்கும் கீழ் உள்ள எல்லா பொதுச் சேவை ஊழியர்கள் இன்று அரசாங்கத்தின் ஈராயிரம் ரிங்கிட் incentive தொகையைப் பெறவிருக்கின்றனர். 
             
            
              Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
              Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
              
                
                  
Weekdays
                
                
                7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
                
                  
Weekend
                
                8am, 9am, 10am, 11am, 12pm
               
              
              
              Weather