← Back to list
உயிரைக் கொல்லும் சாலை விபத்து!
Feb 07, 2024
நாடு முழுவதும் கடந்தாண்டு ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலை விபத்துகளால் உயிரிழந்துள்ளனர்!
அவற்றுள் ஏறக்குறைய எழுபது விழுக்காடு மோட்டார்சைக்கிளை உட்படுத்தியது என சாலை போக்குவரத்துத் துறை கூறியது.
மோட்டார் சைக்கிள் பந்தையங்களும், எஞ்சினை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளும் நிகழ்ந்திருப்பதை JPJ மறுக்கவில்லை.
--------
பெருநாள் சமயத்தில் சீனியைப் பதுக்கி வைக்கும் வணிகர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்!
கெடா மாநில உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவீன அமைச்சு அவ்வாறு எச்சரித்துள்ளது.
விலை கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களைப் பதுக்கி வைத்ததன் தொடர்பில், தமது தரப்பு புகார் எதனையும் இதுவரை பெறவில்லை என KPDN சொன்னது.
--------
Google முன்னதாக அமெரிக்க டாலருக்கு மிக உயரிய மலேசிய ரிங்கிட் மதிப்பு காட்டப்பட்டது கோளாரு காரணமாக மட்டுமே!
ஒரு டாலருக்கான மதிப்பு தற்போது நான்கு ரிங்கிட் எழுபது சென் மட்டுமே.
Google-லில் காட்டப்பட்டது போல அம்மதிப்பு ஆறு ரிங்கிட்டை எட்டவில்லை என்பதை Bank Negara உறுதிப்படுத்தியது.
Bank Negaraவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கம் போன்ற சரியான தளங்களில், ரிங்கிட் மலேசியா மதிப்பை பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ளலாம்.
--------
இணைய மோசடி தொடர்பில் புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்கிறார் தொடர்புத் துறை அமைச்சர்.
வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஈடு கொடுக்க அது அவசியமாவதாக அவர் கூறினார்.
---------
பேராக், Bidor கள்ளக்குடியேறிகள் தடுப்பு முகாமிலிருந்து தப்பியோடியவர்களில் முப்பத்து எட்டு பேர் இன்னும் பிடிப்படவில்லை.
கடந்த வாரம் அங்கிருந்து நூற்று முப்பதுக்கும் மேற்பட்டோர் தப்பியோடினர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather