Now Playing

{{nowplay.song.artist}}

{{nowplay.song.track}}

Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

{{nowplay.song.artist}} Album Art Now playing

{{nowplay.song.track}}

{{nowplay.song.artist}}

Album Art Now playing

RAAGA

Aaha… Sirantha Isai!

{{currentshow.name}} {{currentshow.name}} Current Show

{{currentshow.name}}

{{currentshow.description}}

RAAGA Current Show

RAAGA

Aaha… Sirantha Isai!

← Back to list

மின்னியல் சிகிரட்டின் தாக்கம்

Feb 05, 2024


மின்னியல் சிகிரட்டின் தாக்கம்

 

சிகரட் புகைப்பதற்குப் பதிலாக மின்னியல் சிகரட் அல்லது வேப் புகைப்பது, எந்த வகையிலும் ஒருவரின் உடல்நல தாக்கக்கத்தைக் குறைக்காது! 

அது புற்றுநோயுடன் இன்னும் புதுப்புது நோய்களைக் கொண்டு வரத்தான் செய்கிறது என்கிறார், மலேசிய தேசிய புற்றுநோய் கழகத்தின் தலைவர் Dr M முரளிதரன். 

சிகிரட் புகைப்பதோடு வேப் புகைப்பது தாக்கம் குறைவு தான் என தற்போதுள்ள இளையயோர்கள் நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதனால், பின்னர் ஏற்படும் விளைவுகளை அலட்சியப்படுத்தி வருவதாக கூறுகிறார். 

வேப் பயன்பாடு குறித்து வெளியிடப்படும் தவறான விளம்பரங்களால், சிகரட் புகைக்காகதவர்கள் கூட நாகரீகம் என்ற பெயரில் வேப் புகைக்கத் தொடங்கியிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார். 

பராமரிப்பு இடைவெளியை மூடுதல் என்ற கருப்பொருளில், நேற்று உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. 

-------- 

சமூக ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்கான வழிகள் குறித்து அரசாங்கம் ஆராய்கிறது! 

அத்தளங்களில் இணையப் பாதுகாப்பு, தனியுரிமை, பதிப்புரிமை உள்ளிட்ட பிரச்னைகள் அண்மைய காலமாக அதிகரித்து வருவதோடு, அநாகரீக உள்ளடக்கங்களும் அதிகரித்து வருவதை அடுத்து, தொடர்புத் துறை அமைச்சர் அவ்வாறு கூறினார். 

எனவே பயனர்களைப் பாதுகாக்க, சமூக ஊடகங்களில் சில விதிமுறைகளைக் கொண்டு வர திட்டமிடுவதாக அவர் சொன்னார். 

------  

இதனிடையே 13 வயதுக்குக் கீழ்ப்பட்ட பிள்ளைகள் TikTok கணக்கு வைத்திருப்பது குறித்து, கல்வி அமைச்சு தொடர்புத் துறை அமைச்சரைச் சந்தித்துப் பேசவுள்ளார்! 

அவ்விவகாரம் தொடர்பில் எவ்வித கட்டுப்பாட்டையோ விதியையோ கொண்டு வரும் முன், போதிய விவரங்களைத் திரட்ட வேண்டியிருப்பதாக, கல்வி அமைச்சு சொன்னது. 

-------  

காவல் துறையைச் சேர்ந்த அதிகாரியோ, உறுப்பினரோ தவறு செய்வதைக் கண்டால், அதன் தொடர்பில் புகாரளிக்க முன்வருமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். 

அரச மலேசிய காவல் படையிடம் வெளிப்படைத்தன்மையும் நம்பகத்தன்மையும் இருக்க வேண்டியது மிக முக்கியம் என, தேசிய காவல் படை தலைவர் கூறினார். 

-----  

மற்றொரு நிலவரத்தில், சிலாங்கூரில் பணியில் இருந்த போக்குவரத்துத் துறை அதிகாரி ஒருவர் மூவாயிரம் ரிங்கிட்டுக்கும் மேல் பணம் வைத்திருந்த விவகாரம் தொடர்பில், உள்கட்ட விசாரணை தொடங்கியிருப்பதை மாநில காவல் துறை உறுதிப்படுத்தியது. 

------- 

இந்திய இசையையும் மேல்நாட்டு இசையையும் மையமாகக் கொண்ட Shakti இசைக்குழுவின் This Moment எனும் album, 2023 Grammy விருது விழாவில் சிறந்த உலகலாவிய இசை album விருதை வென்றுள்ளது! 

ஒரு இங்கிலாந்து இசை கலைஞரையும் மூன்று இந்தியர்களையும் கொண்ட, ஷக்தி இசைக்குழு கடந்த ஐம்பது ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  

இதனிடையே இந்திய பிரதமர் நரேந்திர மோடி இடம்பெற்ற Abundance in Millets என்ற பாடல், சிறந்த உலகலாவிய இசை படைப்பு விருதுக்கு முன்மொழியப்பட்டது.  

 


Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!

Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:

Weekdays

7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm

Weekend

8am, 9am, 10am, 11am, 12pm

Weather