← Back to list
கைது ஆணையை நம்பி ஏமாறாதீர்கள்!
Feb 01, 2024
கூட்டரசு நீதிமன்றத்தின் தலைமை பதிவாளரின் கையெழுத்துடன், சமூக வலைத்தளங்களில் பரவி வரும் arrest warrent அல்லது கைது ஆணை போலியானதே!
நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களை அறிவுறுத்துகிறது அரச மலேசிய காவல் படை.
பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்க, மோசடிக்காரர்கள் கையாளும் புதிய யுக்தி இதுவென PDRM சொன்னது.
அடையாளம் தெரியாதவர்கள் Whatsapp அல்லது Telegram மூலம் அந்த கைது ஆணையை அனுப்பி, மிரட்டும் சம்பவங்களை அது சுட்டிக் காட்டியது.
--------
வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கெடுக்க செய்யப்பட்ட இடைநிருத்தத்தை நீட்டிக்க அமைச்சரவை முடிவுச் செய்துள்ளது.
நடப்பில் உள்ள அந்நிய தொழிலாளர்களின் எண்ணிக்கை, நாட்டின் தொழிலாளர் தேவையைப் பூர்த்தி செய்ய ஏதுவாக இருப்பதாக உள்துறை அமைச்சு சொன்னது.
--------
நாட்டின் விமான போக்குவரத்துத் துறை மீட்சியை நோக்கி சீராக சென்று கொண்டிருப்பதாக, Malaysian Aviation Holding Berhad MAHB கூறியுள்ளது.
2022ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு உள்ளூர் விமான நிலையங்களில் விமான செயல்பாடு ஒன்பது விழுக்காடு உயர்ந்துள்ளதாக அது சொன்னது.
---------
நேற்றிரவு வரையிலான நிலவரப்படி திரங்காணுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நானூற்று அறுபதாக உள்ளது!
---------
சரவாக், Kuching-கில் இலக்கவியல் மோசடியில் சிக்கிய எழுபது வயது மதிக்கத்தக்க மூத்தாட்டி ஒருவர் எட்டு லட்சம் ரிங்கிட்டைப் பறிகொடுத்துள்ளார்!
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather