← Back to list
17-ஆவது மாமன்னர் பதவியேற்பு !
Jan 31, 2024
17ஆவது மாமன்னராக பதவியேற்பதற்காக Kuala Lumpur புறப்பட்டுள்ளார் ஜொகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம்!
இன்று காலை அவர் Senai விமான நிலையத்திலிருந்து, சிலாங்கூர் Subang TUDM விமான நிலையத்திற்குச் சென்றார்.
புதிய மாமன்னரின் பதவியேற்புச் சடங்கு காலை பத்து மணிக்குப் பிறகு நடைபெற அட்டவணையிடப்பட்டுள்ளது.
---------
உள்ளூர் பல்கலைக்கழகங்களின் பெருமையை வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்ல, இந்தியாவிலிருந்து இன்னும் அதிகமான மாணவர்களைக் கவர்ந்திழுக்க மலேசியா இலக்கு கொண்டுள்ளது.
நடப்பில் நாட்டில் ஆறாயிரம் இந்திய மாணவர்கள் இருக்கின்றனர்.
2025ஆம் ஆண்டு வாக்கில் அனைத்துலக மாணவர்களின் எண்ணிக்கையை ஒரு லட்சத்து முப்பதாயிரத்திலிருந்து, இரண்டு லட்சத்து ஐம்பதாயிரமாக உயர்த்த மலேசியா இலக்கு கொண்டிருக்கிறது.
--------
Transparency International அமைப்பின் ஊழல் குறியீட்டில் மலேசியா நான்கு இடங்கள் முன்னேறி 57ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.
அப்பட்டியலில் மொத்தம் நூற்று எட்டு நாடுகள் உள்ளன.
--------
பொதுமக்கள் தங்களின் பயணங்களைத் திட்டமிட்டுக் கொள்ள ஏதுவாக, PLUS நிறுவனம் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
வரும் சீனப்புத்தாண்டு தொடங்கி அவர்கள் அச்செயலியைப் பயன்படுத்தலாம்.
------
பேராவில், வெளிநாட்டவர்களிடமிருந்து கையூட்டு கேட்ட விவகாரம் தொடர்பில் மூன்று காவல் வீரர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக, மாநில காவல் துறை சொன்னது.
------
ஆகக் கடைசி தகவல்படி திரங்காணுவில் நானூற்று எழுபது பேர் வெள்ள துயர் துடைப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
------
சரவாக், சிபூவில் போலி Crypto நாணய முதலீட்டில் சிக்கிய 40 வயது நபர் ஒருவர், 94 ஆயிரம் ரிங்கிட்டைப் பறிகொடுத்தார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather