← Back to list
16ஆவது மாமன்னரின் புறப்பாடு !
Jan 30, 2024
16ஆவது மாமன்னர் Istana Negara-விலிருந்து புறப்பட்டுள்ளார்!
ஐந்தாண்டுகள் ஆட்சிக் காலம் முடிந்த வரை வழியனுப்பும் அந்த விழாவில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பஹாங் செல்ல KLIA அனைத்துலக விமான நிலையத்திற்குச் செல்லும் முன், நாடாளுமன்ற கட்டிடத்திற்கு முன் மாமன்னர் தம்பதியர் நின்றனர்.
அவர்களைக் காண பொதுமக்கள் காலை மணி 6.30 தொடங்கி ஒன்று கூடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
------
நாடு முழுவதும் நானூரு முக்கிய பகுதிகளைத் தீயணைப்பு மீட்புத் துறை கண்காணிக்கவுள்ளது!
அடுத்த மாதத்திலிருந்து கடும் வெப்ப காலம் தொடங்கவிருப்பதால், அதனை எதிர்கொள்ள அத்துறை ஆயத்தமாக இருக்கிறது.
வரக்கூடிய வெப்ப காலம் இதற்கு முன் இல்லாத அளவுக்கு மோசமாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தீச் சம்பவங்களைத் தவிர்க்க கரிமண், குப்பைகளை அழிக்கும் தளங்கள் ஆகியவற்றில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-------
இம்மாதத்தின் மூன்றாவது வாரத்தில் டெங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கையில் நானூற்று நாட்பது சம்பவங்கள் அதிகம் பதிவாகியுள்ளது.
எனினும் அக்காலகட்டத்தில் டெங்கியால் மரணங்கள் பதிவாகவில்லை.
-------
2022ஆம் ஆண்டைக் காட்டிலும் கடந்தாண்டு நாட்டில் பதிவான தொழுநோய் சம்பவங்களின் எண்ணிக்கையில் நாட்பது விழுக்காடு உயர்வு தென்படுகிறது!
அந்நோயைக் கண்டறிவது அதிகமாக இருப்பதே இதற்கு முக்கிய காரணம் என சுகாதார அமைச்சு சொன்னது.
------
திரங்காணுவில் நானூற்று எழுபது பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பஹாங்கில் முப்பதுக்கும் குறைவானோரே பாதிக்கப்பட்டுள்ளனர்.
------
மூன்று லட்சத்து 95 ஆயிரம் மாணவர்களை உட்படுத்தி, இன்று SPM எழுத்துப்பூர்வ தேர்வு தொடங்குகிறது.
------
சீரமைப்பு மற்றும் மேம்படுத்தும் வேலைகளுக்காக 2020ஆம் ஆண்டு முடப்பட்ட ஜொகூர் மிருகக்காட்சி சாலை இவ்வாண்டு ஏப்ரலில் மீண்டும் திறக்கப்படும் என எதிர்ப்ப்பார்க்கப்படுவதாக, மாநில அரசு தெரிவித்தது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather