← Back to list
ஏமாந்தனர் தொழிலாளர்கள்
Jan 17, 2024
Johor, Pengerang-கில் அந்நிய தொழிலாளர்களை உட்படுத்திய பெரும் மோசடி ஒன்று குறித்து மாநில தொழிலாளர் துறை 13 விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது!
இல்லாத வேலை வாய்ப்பைக் கொடுப்பதாகக் கூறி எழுநூரு வங்காளதேச தொழிலாளர்களை மலேசியா அழைத்து வந்து ஐந்து முதலாளிகள் ஏமாற்றியிருப்பதாக மனிதவள அமைச்சர் Steven Sim கூறினார்.
மலேசிய சட்டத்தின் கீழ், அந்நிய தொழிலாளர்களைக் கொண்டு வரும் முதலாளிகள், அவர்களுக்கு கட்டாயம் சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதை அவர் நினைவூட்டினார்.
இம்மோசடியில் சம்பந்தப்பட்ட ஐந்து முதலாளிகளும் கருப்புப் பட்டியலிடப்பட்டிருப்பதாக முன்னதாக மனிதவள அமைச்சு கூறியது.
--------
நிலைக்கால நாடாளுமன்ற சட்டம் குறித்து அரசாங்கத்துக்கு எந்த முடிவும் இல்லை!
அப்பரிந்துரை தொடர்பில், உரிய நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என பிரதமர் கூறியுள்ளார்.
அச்சட்டம், ஆட்சி கவிழ்ப்பு யுக்திகளைத் தகர்த்து, அந்தந்த கால நடப்பு அரசாங்கம் தனது ஐந்தாண்டு ஆட்சி காலத்தை நிறைவுச் செய்ய வகை செய்யும் நோக்கிலானது.
--------
நாட்டிலுள்ள அறுபது சிறைச்சாலைகளில் நெரிசல் நிலவுகின்றது!
71 ஆயிரம் கைதிகள் அதிகபட்சமாக இருக்க வேண்டிய அச்சிறைகளில் 75 ஆயிரம் கைதிகள் இருப்பதாக மலேசிய சிறைத்துறை தெரிவித்தது.
-------
பஹாங், Pekan, Rompin மற்றும் ஜொகூர் மெர்சிஙில் கனமழை எச்சரிக்கை!
அப்பகுதிகளில் இன்று காலை பத்து மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-------
தலைநகரில், நடிகை ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து கிட்டத்தட்ட 30 ஆயிரம் ரிங்கிட் வேறொரு கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளது!
தாம் யாரிடமும் தமது வங்கிக் கணக்குக் குறித்த சுய விவரங்களைக் கொடுக்கவில்லை என கூறி அதன் தொடர்பில் அவர் காவல் துறையிடம் புகாரளித்துள்ளார்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather