← Back to list
வெள்ளம்: ஒதுக்கீடு வழங்குகிறது அரசாங்கம்!
Jan 15, 2024
வெள்ள நிலவரத்தில் மாற்றமில்லை!
ஆகக் கடைசி தகவல்படி மூன்று மாநிலங்களில் மொத்தம் ஐநூற்று முப்பதுக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜொகூரில் இருநூற்று தொள்ளாயிரம் பேர் தற்காலிக நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.
பஹாங்கில் நூற்று 75 பேரும், சபாவில் எழுபதுக்கும் மேற்பட்டோரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே வெள்ளத்தால் ஏற்பட்ட சேதத்தைச் சரிச் செய்ய தகுந்த ஒதுக்கீட்டை அரசாங்கம் கொடுக்கவிருக்கிறது!
அதற்காக ஜொகூரில் வெள்ளம் ஏறிய பகுதிகளை விரைவில் நேரில் சென்று பார்க்கவிருப்பதாக பொதுப் பணி அமைச்சர் Datuk Seri Alexander Nanta Linggi கூறியிருக்கிறார்.
ஜொகூர், Kluang-கில் பராமரிப்பாளரிடம் விடப்பட்ட ஆறு மாத ஆண்குழந்தையின் உடலில் கடித்த காயங்கள் இருப்பது குறித்து காவல் துறையில் புகாரளிக்கப்பட்டுள்ளது!
அது சம்பந்தப்பட்ட பராமரிப்பாளரின் மூன்று வயது குழந்தை செய்த காரியமாக இருக்கலாம் என நம்பப்படும் நிலையில், இருபது வயது மதிக்கத்தக்க அந்த பராமரிப்பாளர் விசாரணைக்கு அழைக்கப்படவிருப்பதாகக் காவல் துறை கூறியது.
போகி பண்டிகையால் ஏற்பட்ட புகைமற்றும் கடும் பனிமூட்டத்தால் இந்தியா, சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது.
ஹைதராபாத்துக்கு திருப்பிவிடப்பட்ட விமானங்கள், நிலைமை சீரான பிறகு சென்னையில் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்கின.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather