← Back to list
கவனமாக இருங்கள் - LHDN!
Feb 14, 2023
வரி செலுத்துவோர், தங்களது பணியாளர்கள் போல் அடையாளம் காட்டிக் கொள்ளும் நபர்களிடம் கவனமாக இருக்குமாறு உள்நாட்டு வருவாய் வாரியம் நினைவுறுத்தியுள்ளது.
வார இறுதிகளில், தனிப்பட்ட எண்களில் இருந்து வரும் அழைப்புகள் குறித்து கவனமாக இருக்குமாறு LHDN பொதுமக்களுக்கு ஆலோசனை கூறியது.
சந்தேகங்கள் ஏதும் இருந்தால் அதனை தெளிவுபடுத்திக் கொள்ள, LHDNனின் அதிகாரப்பூர்வ எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Foto: Bernama
ஐந்து ரிங்கிட் விலையில் உணவு விற்கும் Menu Rahmah திட்டம் எப்போது வரை நடைமுறையில் இருக்கும் என்பதற்கு கால வரையறை ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை.
சம்பந்தப்பட்ட தரப்புகள் தன்னார்வ முறையில் தொடரும் வரை அத்திட்டம் அமலில் இருக்கும் என உள்நாட்டு வாணிக, வாழ்க்கைச் செலவின அமைச்சு கூறியது.
அத்திட்டத்திற்காக அரசாங்கப் பணம் ஏதும் செலவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
துருக்கியேவில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனிதநேய உதவிகளை வழங்க மலேசியா இரண்டாவது திறந்தவெளி மருத்துவமனையை அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய முதலாவது குழுவை விட இரண்டாவது சற்று எண்ணிக்கை குறைந்திருக்கும் என ஆயுதப்படை தெரிவித்தது.
மலேசியாவின் முதலாவது திறந்தவெளி மருத்துவமனை நாளை இயங்கத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தவணைக் காலம் முடிவடையும் வரை Datuk Seri Anwar Ibrahim பிரதமராக நீடிக்க முழு ஆதரவு வழங்கவிருப்பதாக அம்னோ மீண்டும் தெரிவித்துள்ளது.
நாட்டின் நலனை முன்னிறுத்தி தங்களின் நிலைப்பாடாக அது இருப்பதாக அக்கட்சி கூறியது.
நாட்டில் அரசியல் மீண்டும் நிலைத்தன்மை பெற வேண்டும் என பேரரசர் நேற்று வலியிறுத்தியிருந்தார்.
தமது ஆட்சியில் இதுவரை நான்கு பிரதமர்களைக் கண்டு விட்டதாகக் குறிப்பிட்ட மாமன்னர், தாம் பஹாங்கிற்குத் திரும்பும் வரை, Anwarரே அப்பொறுப்பில் நீடிப்பார் என எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.
பெண் ஒருவரை மருத்துவப் பணியாளர் கடிந்த கொண்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரிக்கப்படுவதாக பேரா மாநில சுகாதார செயற்குழுத் தலைவர் கூறியிருக்கிறார்.
Kamparரில் மருத்துவமனையொன்றின் அவசரப் பிரிவில் சிகிச்சை பெறச் சென்ற அப்பெண் அநாகரிகமான முறையில் ஆடை அணிந்திருந்ததாகக் கூறி அம்மருத்துவப் பணியாளர் திட்டியதாகக் கூறப்படுகிறது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather