← Back to list
சாலை வரியைத் தற்போதைக்கு அகற்ற முடியாது!
Feb 13, 2023
வாகனங்களுக்கானச் சாலை வரியை தற்போதைக்கு அகற்ற முடியாது.
அரசாங்கத்தின் வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருப்பதால், அது மிகவும் அவசியமாவதாக போக்குவரத்து அமைச்சர் Anthony Loke விளக்கினார்.
சாலை வரி ஒட்டு வில்லைகளை இனி கண்ணாடியில் பார்வைக்கு வைக்கத் தேவையில்லை என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதனை அடுத்து சாலை வரியை முழுமையாக அகற்றும்படி முன் வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அவர் அவ்வாறு பதிலளித்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து MyJPJ செயலியில் இதுவரை 28 லட்சம் பேர் பதிந்து கொண்டுள்ளனர்.
தனிநபர் வாகனங்களில் கண்ணாடிகளில் இனி சாலை வரி ஒட்டு வில்லைகளைக் காட்சிக்கு வைக்கத் தேவையில்லை என அண்மையில் அறிவிக்கப்பட்டது.
அதன் இலக்கயியல் பதிப்பை MyJPJ செயலியில் காணலாம் என போக்குவரத்து அமைச்சு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு நிலவரத்தில், MyJPJ செயலியில் காணப்பட்ட பிரச்னைகள் அது அறிமுகப்படுத்தப்பட்டதற்கு முன்பே சரி செய்யப்பட்டு விட்டன.
அச்செயலியைப் பயன்படுத்துவதால் தனிப்பட்ட தரவுகள் பாதுகாப்பு குறித்து சிலர் கவலை தெரிவித்திருந்த நிலையில், தொடர்பு, இலக்கயியல் அமைச்சு அதனைத் தெரிவித்தது .
பஹாங், Bukit Tinggiயிலும் Janda Baikக்கிலும் சுமார் 300 பேர் தத்தம் இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கன மழையைத் தொடர்ந்து அவ்விடங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
நேற்று முன் தினம் அதே பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால், சேறும், பாறைகளும் உயரமான நிலத்தில் இருந்து கீழே கொட்டின.
பிரதமர் Datuk Seri Anwar Ibrahimமின் மூத்த பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் பதவியில் இருந்து Nurul Izzah விலகியிருக்கிறார்.
மாறாக அவர் நிதியமைச்சுக்கான ஆலோசக் குழுவின் செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்கும் செயலகத்தில் இணைய தமக்கு வந்த அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
பிரதமர் தமது புதல்வியான Nurul Izzahவை மூத்த பொருளாதார மற்றும் நிதி ஆலோசகர் பதவியில் அமர்த்தியதை அடுத்து முன்னதாக பல சர்ச்சைகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
பினாங்கு மாநிலத்தின் இரண்டாவது துணை முதலமைச்சர் Dr P. Ramasamyக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், அவ்விவகாரம் உள்நிலையில் தீர்க்கப்படும் என DAP கட்சி கூறியிருக்கிறது.
பொதுச் சேவைத் துறை தொடர்பில் அவர் இனத்துவேசமாகப் பேசியதாக முன்னதாகக் கூறப்பட்டது.
மற்றொரு நிலவரத்தில், பொது சேவை ஊழியர்களை பணியில் அமர்த்துவதிலும் பதவி உயர்வு வழங்குவதிலும் இனப் பாகுபாடு காட்டப்பட்டதில்லை என CUEPACS அறிவித்திருக்கிறது.
Merit மற்றும் திறன் அடிப்படையிலேயே நியமனங்கள் இருப்பதாக அது தெளிவுபடுத்தியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather