← Back to list
ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை!
Jan 31, 2023
நான்கு மாநிலங்களில் நாளை வரை தொடர் மழை பெய்யும் என ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
ஜொகூர், பஹாங், சபா, சரவாக் ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அந்நிலை காணப்படும் என வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள மாநில மற்றும் மாவட்ட பேரிடர் நிர்வாக மையங்களை முடுக்கி விடவும் தயார் நிலையில் இருக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
வெள்ளம் காரணமாக துயர் துடைப்பு மையங்களுக்கு மாற மறுப்பவர்களுக்கும் கூட கருணைத் தொகை வழங்கப்படும்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிகள் சென்று சேர வேண்டும்; யாரும் விடுபட்டு விடக்கூடாது.
அதுவே அரசாங்கத்தின் தலையாய நோக்கம் என துணைப்பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi தெரிவித்தார்.
குறைந்த வருமானம் பெறும் தரப்பினருக்குச் சுமையை ஏற்படுத்தாமல் தேசியக் கடனை படிப்படியாகக் குறைப்பதற்கான வழி வகைகளை அரசாங்கம் ஆராயும்.
வரியை உயர்த்த முடியாது; அதே சமயம் 2018டில் ரத்து செய்யப்பட்ட பொருள், சேவை வரி GSTயை மீண்டும் கொண்டு வருவதில் அரசாங்கம் அவசரம் காட்டது எனவும் பிரதம்ர் சொன்னார்.
GST, மிகவும் வெளிப்படையான, ஆக்ககரமான வரி முறையாக இருந்தாலும் கூட அதனைத் தற்போதைக்கு மீண்டும் அறிமுகப்படுத்த எண்ணமில்லை என Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
ஐந்தாம் படிவத்துக்கான SPM தேர்வுக்கு அமரும் மாணவர்களை உட்படுத்திய கோவிட்-19 பரவலை எதிர்கொள்ள கல்வியமைச்சு தொடர்ந்து சுகாதார அமைச்சுடன் ஒத்துழைக்கும்.
அந்நிலையைக் கையாள உரிய அணுகுமுறைகள் இருப்பதாகவும் கல்வியமைச்சு கூறியது.
எனவே SPM தேர்வெழுதும் மாணவர்கள் அது குறித்து கவலைப்படத் தேவையில்லை என அது கேட்டுக் கொண்டது.
கடந்தாண்டு நெடுகிலும் மலேசிய சுற்றுப் பயணிகள் தாய்லாந்தில் 3 பில்லியன் ரிங்கிட் செலவழித்துள்ளனர்.
கோவிட்-19 பரவலால் மூடப்பட்டிருந்த இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதை அடுத்து, கடந்தாண்டு ஒன்றரை மில்லியன் மலேசியர்கள் தாய்லாந்து வந்துள்ளதாக அந்நாட்டு சுற்றுலா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather