← Back to list
STR நிதியுதவி இன்று முதல் விநியோகிக்கப்படும்!
Jan 17, 2023
B40 தரப்பினருக்கான ரொக்க உதவி நிதி இனி Rahmah ரொக்க நிதியுதவியாக மாற்றப்படும்.
அத்தொகை முதல் கட்டமாக இன்று தொடங்கி விநியோகிக்கப்படும் என பிரதமர் தெரிவித்தார்.
மக்களின் சுமையைக் குறைக்கும் பொருட்டு, ஏற்கனவே மார்ச் மாதம் வழங்க திட்டமிடப்பட்டிருந்த தொகை முன் கூட்டியே கொடுக்கப்படுவதாக Datuk Seri Anwar Ibrahim கூறினார்.
4 மில்லியன் குடும்பங்கள் 300 ரிங்கிட் பெறும்; அதே சமயம் துணை இல்லாத 1.2 மில்லியன் முதியோருக்கும் இன்னும் திருமணம் ஆகாத 3.5 மில்லியன் பேருக்கும் 100 ரிங்கிட் வழங்கப்படும்.
அதன் வழி 8.7 மில்லியன் பேர் பலனடைவர்.
நிதி நெருக்கடியில் உள்ள மலேசியர்களுக்கு உதவ வேறு வழிவகைகள் ஆராயப்படும் என பிரதமர் தெரிவித்திருக்கிறார்.
ஊழியர் சேமநிதி வாரியம் EPFவில் இருந்து பணத்தை மீட்க மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து Datuk Seri Anwar Ibrahim அவ்வாறு கூறினார்.
பெரும்பாலான மலேசியர்களுக்கு EPF கணக்கில் போதுமான பணம் இல்லை.
எனவே மாற்றுத் தீர்வுகள் கண்டறியப்படும் என்றாரவர்.
அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் இவ்வாரம் தொடங்கி 150 ரிங்கிட் உதவிநிதி விநியோகிக்கப்படும்.
அத்தொகை கட்டங் கட்டமாகக் கொடுக்கப்படும்.
ஆரம்பப் பள்ளி மாணவர்களின் பெற்றோர் MyKad அட்டைகளையும் MyKid அல்லது பிள்ளையின் பிறப்புப் பத்திரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சீனப் புத்தாண்டு விடுமுறையின் போது நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பயண நேர ஆலோசனை அட்டவணையைப் பின்பற்றுமாறு PLUS வாகனமோட்டிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
பெருநாள் சமயத்தில் நாள்தோறும் 2 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வேளையில், RFID சேவையைப் பயன்படுத்துவோர் தங்களது e-walletட்டில் போதுமான தொகை இருப்பதை உறுதிச் செய்து கொள்ளுமாறும் அது ஆலோசனை கூறியது.
மலாக்காவில் பொது இடங்களிலும் உள்ளரங்குகளிலும் சுவாசக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படாது.
கடந்த இரு வாரங்களில் அம்மாநிலத்தில் பதிவான கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை குறைவாகவே இருப்பதால், அம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்தது.
நாட்டில் கொரோனா தொற்றுகள் மீண்டும் அதிகரித்தால் சுவாசக்கவசம் அணிவதை கட்டாயமாக்க மலாக்கா பரிசீலிக்கலாம் என முன்னதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அங்கீகரிக்கப்பட்ட கிட்டதட்ட 20 விழுக்காட்டு MyKid அட்டைகள் இன்னும் கோரப்படாமல் உள்ளன.
சம்பந்தப்பட்ட பெற்றோர் உடனடியாகக் கோரவில்லை என்றால், அவை அழிக்கப்படும் என உள்துறை அமைச்சு நினைவுறுத்தியது.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather