← Back to list
ஏழாயிரம் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசிகள்!
Jan 11, 2023
வரும் பண்டிகைக் காலத்தின் போது நாட்டில் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிரடியாக உயராது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு முன் நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்ட போது அவ்வாறு நிகழவில்லை.
அதோடு ஹரிராயா பண்டிகை உள்ளிட்ட விழாக் காலங்கள் சமயங்களிலும் கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை அதிரடியாக அதிகரிக்கவில்லை.
அதன் அடிப்படையில் சுகாதாரத் தலைமை இயக்குனர் அவ்வாறு நம்பிக்கை தெரிவித்தார்.
இவ்வேளையில் சில மாதங்களுக்கு முன் மூவாயிரத்துக்கும் கூடுதலாகப் பதிவாகி வந்த தினசரி சம்பவங்களின் எண்ணிக்கை தற்போது 500க்கும் கீழ் இறங்கியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
நாளொன்றுக்கு சராசரியாக ஏழாயிரம் இரண்டாவது ஊக்கத் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன.
கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஊக்குவிக்கப்படும் முக்கியத் தரப்பினர், சுகாதார சிகிச்சை நிலையங்கள் அல்லது தனியார் சிகிச்சை மையங்களில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு walk-in முறையில் நேரடியாகச் செல்லலாம்.
மற்றவர்கள் MySejahtera செயலி மூலம் சந்திப்புறுதிகளுக்குப் பதிவு செய்யலாம் என சுகாதார அமைச்சு கூறியது.
சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு அனைத்துலக நுழைவாயில்களில் சிறப்புப் பாதைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் என குடிநுழைவுத்துறை தெரிவித்திருக்கிறது.
கோவிட்-19 கிரிமித் தொற்று பீடித்தவர்கள் கண்டறியப்பட்டால், அவர்கள் சுகாதார அமைச்சின் பணியாளர்களால் கவனிக்கப்படுவர்.
சம்பந்தப்பட்டவர்கள் மேலும் சில பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் அது கூறியது.
கட்டாய மரண தண்டனைக்கு மாற்றான தண்டனைகள் குறித்த பரிந்துரைகளை அரசாங்கம் தற்போது ஆய்வு செய்து வருகிறது.
அதன் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் முன் வைக்கும் கருத்துகள் வரவேற்கப்படுவதாக பிரதமர் துறையின் சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தங்கள் பிரிவு கூறியது.
நாட்டில் தற்போது ஆயிரத்து 300க்கும் அதிகமான கைதிகள் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியுள்ளனர்.
பணத்திற்கு மாற்றாக பொதுச் சேவைத்துறையில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்து வரும் கும்பலிடம் கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
அம்மோசடிக் கும்பல் பொதுச் சேவைத்துறையின் ஆணையர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரின் பெயர்களைப் பயன்படுத்தி, போலி சமூக வலைத்தளக் கணக்குகளை உருவாக்கி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கப் பணிகளைப் பெற கட்டணங்கள் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் பொதுச் சேவைத்துறை நினைவுறுத்தியது.
நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குக் கூடுதலாக 291 விமானப் பயணங்களை மலேசிய வான் போக்குவரத்து ஆணையம் அங்கீகரித்துள்ளது.
சீனப் புத்தாண்டை முன்னிட்டு அக்கூடுதல் பயணச் சேவைகள் வழங்கப்படுகின்றன.
Find out what's happening locally and abroad as well as what's trending, and don't miss out on the results of your favourite sport!
Make sure you tune in to PETRONAS News Update on THR Raaga at these times:
Weekdays
7am, 7.30am, 8am, 8.30am, 9am, 10am, 11am, 12pm, 1pm, 2pm, 3pm, 4pm, 5pm, 6pm, 7pm
Weekend
8am, 9am, 10am, 11am, 12pm
Weather